ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் ஒவ்வொருவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது, அதன் வேகம் மற்றும் நீண்ட நேரம் நிலைக்கும் பேட்டரி ஆகியவை தான். அந்த வகையில், அதிகமான நேரம் நீடிக்கும் பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டுடன் அறிமுகமாக உள்ளது ஒன்பிளஸ் 15. இந்த ஃபோன் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது. அது எப்போது.? இந்த போனின் அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement


அத்தியாவசியமாகிவிட்ட செல்ஃபோன்கள்


இன்றைய காலகட்டத்தில் செல்ஃபோன் இல்லாதவர்களே இல்லை என்று கூறலாம். சொந்த உபயோகம் தவிர, தற்போது வியாபாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது செல்ஃபோன்கள். ஆன்லைன் வியாபாரம், பொருட்கள் வாங்கும்போது பணம் செலத்துவது என, செல்ஃபோன் இல்லாமல் வர்த்தகம், வியாபாரம் இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டது. 10 ரூபாய் தொடங்கி லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான வியாபாரங்கள் செல்போன் மூலமாகவே தற்போது நடந்து வருகின்றன.


அந்த அளவிற்கு செல்ஃபோன்கள் அத்தியாவசியமாகிவிட்டன. சாலை ஓரம் இருக்கும் சிறு வியாபாரி தொடங்கி, பெரிய நிறுவனங்கள் வரை, எல்லா பணப் பரிவர்த்தனைகளுமே செல்ஃபோன் மூலமாகவே நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், செல்ஃபோன் வாங்குவோர் ஒவ்வொருவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது, அதன் வேகமான செயல்பாடு, நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆகியவை தான். அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு தரமான செல்போனை களமிறக்க உள்ளது.


அக்டோபர் 27-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15


தரமான செல்ஃபோன்களுக்கு பெயர் போன ஒன்பிளஸ் நிறுவனம், அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்ஃபோனான ஒன்பிளஸ் 15-ன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் அக்டோபர் மாத இறுதியில், அதாவது 27-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த ஸ்மார்ட்ஃபோன், ஒன்பிளஸ் 15R-ஐ போலவே கேமரா பம்ப்(Bump) கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆனால், 3 சென்சார்களுக்கு பதில் 2 சென்சார்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த ஃபோன் 2 நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.


இதனுடன், மற்றொரு ஹை என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6-ம் அதே தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஃபோன்களும் பல்வேறு ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டள்ளன. வரும் 27-ம் தேதி அறிமுகத்திற்குப் பின், அவை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒன்பிளஸ் 15-ன் சிறப்பம்சங்கள் என்ன.?


ஒன்பிளஸ் 15-ஐ பொறுத்தவரை, குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வருகிறது. இந்த சிப்செட்டுடன் வரும் இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்ஃபோன் என்று ஒன்பிளஸ் உறுதி செய்துள்ளது.


இதில், 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீனும், 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 7000 mAh பேட்டரியை கொண்டிருக்கும் எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


மேலும், 12 GB ரேம், 50 MP வைட் ஆங்கிள் முதன்மை கேமரா, 50 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3.5x ஆப்ட்டிகள் ஜூம் வசதியுடன் 50 MP பெரிஸ்கோப் கேமரா, எல்ஈடி ஃபிளாஷ் ஆகியவற்றை கொண்டிருக்கும்.


ஒன்பிளஸ் ஏஸ் 6-ன் சிறப்பம்சங்கள்


இதேபோல், அன்றைய தினம் வெளியாகும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்ஃபோனில், 120 Hz ரெப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சர் ஆகியவற்றை கொண்டிருக்கும்.


இந்த ஃபோன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் வருகிறது. சார்ஜிங்கை பொறுத்தவரை, 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800 mAh மெகா பேட்டரியுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.