தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். நடிப்பிற்கு சவால் அளிக்கும் விதமாக இவர் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன், வில்லன் பல படங்கள் அடங்கும். குறிப்பாக, அவர் நடித்த வரலாறு படம் அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாகும். 


வரலாறு


இந்த படத்தில் நடிகர் அஜித் இளைஞராகவும், வில்லத்தனம் கொண்ட மகனாகவும், பெண் தன்மை கொண்ட பரதக்கலைஞராகவும் நடித்து அசத்தியிருப்பார். தமிழில் அஜித் தனது நடிப்பால் அந்த பரதக்கலைஞர் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அஜித் நடித்த கதாபாத்திரத்திலே அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருக்கும். 


அஜித்தின் நடிப்பிற்கு மிகவும் சவாலாக அமைந்த இந்த வரலாறு படத்தை கன்னடம், ஒடியா மற்றும் பர்மிஸ் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்திருப்பார்கள். 


கன்னடம்:


கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உபேந்திரா கன்னடத்தில் வரலாறு ரீமேக்கில் நடித்திருப்பார். அங்கு காட்ஃபாதர் என்ற பெயரில் இந்த படம் உருவாகியது. கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் சேது ஸ்ரீராம் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கும். அஜித் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவு உபேந்திரா இந்த படத்தில் நடித்திருப்பார். கன்னட ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  4.5 கோடி ரூபாயில் 7 கோடி வரை கன்னடத்தில் வசூலித்தது. 


ஒடியா:


இந்திய திரையுலகில் அதிகம் அறியப்படாத திரையுலகம் ஒடியா திரையுலகம். ஒடியா மொழியில் வரலாறு படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அங்கு து மோ தெஹரா சாய் என்ற மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஹிமான்சு பாரிஜா இயக்கிய இந்த படத்தில் அம்லான், ரியா, மிகிர்தாஸ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேமானந்த் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகன் அம்லான் இளைஞராக நன்றாக நடித்திருந்தாலும், தந்தை கதாபாத்திரத்தில் ஒடிசாவின் முன்னணி நடிகர் மிஹிர்தாஸ் நடித்திருப்பார். தமிழில் பார்த்துவிட்டு ஒடியாவில் பார்த்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. 


பர்மிஸ்:
 
வரலாறு படத்தை இந்திய மொழி மட்டுமின்றி மியான்மர் நாட்டிலும் ரீமேக் செய்தனர். பர்மீஸ் மொழியில் ரீமேக் செய்திருப்பார்கள். இந்த படத்திற்கு நட் கத் மார் டே டைடே ப்வால் என்று பெயர் வைத்திருப்பார்கள். படத்தின் நாயகனாக நய் டோ நடித்திருப்பார். அவர் 3 கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இந்த படத்தை ந்யூன்ட் மியான்மர் நை நை ஆங் இயக்கியிருப்பார். அந்த நாட்டில் மியான்மர் அகாடமி விருதை சிறந்த நடிகருக்காக இந்த படம் வென்றுள்ளது. இந்த படத்தின் நாயகன் நடிப்பு அந்த ஊர் ரசிகர்களுக்கு ரசிக்கும்படி அமைந்திருந்ததால் அங்கு வரேவற்பை பெற்றது.. மியான்மர் நாட்டு நடன கலைஞராக அவர் நடித்திருப்பார். அவர்களின் பட்ஜெட் தொகை குறைந்த அளவு என்பதால் இந்த படம் பார்ப்பதற்கு சீரியல் போன்று இருக்கும்.


ஆனால், தமிழில் அஜித்தின் நடிப்பிற்கு இணையாக எந்த மொழியிலும் யாரும் ஈடுகொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.