Crime: இளைஞருடன் நெருக்கம்.. நடுகாட்டில் நடந்த சம்பவம்.. கள்ளக்காதலியை போட்டு தள்ளிய கள்ளக்காதலன்..
Crime: "செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், இளைஞருடன் நெருங்கி பழகியதால் கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் போலீசாரால் கைது"

சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் நல்லம்பாக்கம், பகுதியை சேர்ந்த சங்கர் (47). இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர் கேளம்பாக்கம் அருகே உள்ள கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியில், எலக்ட்ரீஷன்னாக பணியாற்றி வந்த குமரேசன் என்பவர் உடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது.
"தனிமையில் சந்தித்து உல்லாசம்"
நட்பாக ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் படிப்படியாக அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருவருடைய கள்ளத்தொடர்பு தெரிந்த பிறகு, கணவர் கண்டித்துள்ளார். இருந்தும் தனது கள்ளத்தொடர்பை செல்வராணி கைவிடவில்லை.
இதனிடையே, செல்வராணி மற்றொரு நபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்த பழக்கமும் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கள்ளக்காதலன் குமரேசன் செல்வராணியை தொடர்ந்து மிரட்டியும் சண்டையிட்டும் வந்துள்ளனர். இதனால் குமரேசன் உடன் செல்வராணி பேசுவதை தவிர்த்து உள்ளார்.
மாயமான செல்வராணி
கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற செல்வராணி, வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கணவர் இது குறித்து காவல்நிலையில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். இதில், செல்வராணிக்கு கடைசியாக போன் செய்தது திருவண்ணாமலையை சேர்ந்த குமரேசன் என தெரிய திருவண்ணாமலையிலிருந்து குமரேசனை காவல்துறையில் கைது செய்தனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்
இதனைத் தொடர்ந்து காவல்துறையின அடுத்த விசாரணையில் குமரேசன் தெரிவித்ததாவது: நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தோம். இந்த நிலையில் அவர் பணி புரியும் கல்லூரியில் வேறு ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காயார் அருகே குமிழி வனப்பகுதிக்கு அழைத்து சென்று, செல்வராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
பின்னர் அவரது சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டேன் என்று குமரேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸகுமரேசன் சொன்ன பகுதிக்கு சென்று காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.