திரையுலகில் இன்று மிஸ்டர் பர்ஃபெட் என பெயர் எடுத்துள்ள அஜித், ஷாலினியை காதலிக்கும் முன், பிரபல நடிகையை தான் காதலித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம் அவர் வேறு யாரும் அல்ல, பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஹீரா ராஜகோபாலை தான்.

இவர்கள் இருவரும், 'காதல் கோட்டை' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது காதலிக்க துவங்கி உள்ளனர். அதன் பிறகு தொடரும் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போதே அஜித் நடிகை ஹீரா ராஜகோபாலுக்கு அடிக்கடி காதல் கடிதம் எழுதுவாராம். ஒருகட்டத்தில் ஹீராவின் காதல் விவகாரம் அவரது அம்மாவிற்கு தெரியவர அவர் மறுப்பு தெரிவிக்க தொடங்கினார். காரணம் அஜித் இப்போது இருக்கும் அளவுக்கு அப்போது மிகவும் பிரபலமில்லை.

சினிமா வாழ்க்கை ஒரு மாயகண்ணடி போல் அது எப்போது ஒருவரை கைவிடும் என தெரியாது. எனவே வளர்ந்து வரு ஒரு ஹீரோவுக்கு, அவரின் மகளை திருமணம் செய்து வைப்பதில் ஹீராவின் அம்மாவுக்கு விருப்பம் இல்லாமல் போனது. பின்னர் ஹீரா போதைக்கு அடிமையாகியுள்ளார்.

இது குறித்து அஜித் கூட ஒரு பேட்டியில், ஹீரா ராஜகோபால் முன்பு இருந்தது போன்று இப்போது கிடையாது என்று கூறியிருந்தார். 1996ல் தொடங்கிய காதல் வாழ்க்கை 1999ஆம் ஆண்டிற்குள்ளாக முடிவுக்கு வந்தது. அஜித்தும் ஹீரா போதைக்கு அடிமையானதால் அவரை விட்டு விலகினார் என கூறப்படுகிறது.

அதன் பிறகு அஜித்தின் அமர்க்களம் தொடங்கியது. இந்தப் படத்தில் அஜித் ஷாலினியை பார்க்க அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஷாலினியின் எதார்த்தமான பேச்சும், கூச்ச சுபாவமும், எளிமையும் தான் அஜித்தை கவந்ததாக கூறப்படுகிறது. அமர்க்களம் படப்பிடிப்பின் போது, அஜித் ஷாலினியின் கையை வெட்டுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றது. உண்மையில் அஜித் அவரது கையை வெட்டவே, உடனடியாக மருத்துவமனைக்க்கு கொண்டு செல்லப்பட்டார் ஷாலினி. இதையடுத்து ஷாலினியை நன்கு கவனித்துக் கொண்ட அஜித்துக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. ஷாலினியும் அஜித்தின் பாசத்தில் உருகி போனார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு அஜித் - ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது ஆத்விக் மற்றும் அனோஸ்கா என இரு பிள்ளைகளும் இவர்களுக்கு உள்ளனர்.