நடிகர் அஜித் - தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் காம்போவில் 3ஆவது படமாக ஏகே 61 படம் உருவாகி வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இப்படத்துக்காக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் முன்னதாக நடிகர் அஜித் கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதோடு அங்கு ராணுவ வீரர்கள் சிலருடன் புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்த படத்திற்கான ஷூட்டிங் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  தற்போது படம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கி கொள்ளை மையமான கதைக்களத்தில் அஜித்தின் நடிப்பு, எனவே படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

21 நாட்கள் பாங்காக்கில் சூட்டிங்:

முன்னதாக இயக்குனர் ஹெச்.வினோத்தும் படக்குழுவினரும் செப்டம்பர் முதல் வாரம் ஷூட்டிங்குக்காக பாங்காக் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் 21 நாட்கள் பாங்காக்கில் நடக்கவிருக்கிறது. 

அக்டோபர் மாதத்திற்குள் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறும் எனவும், அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவில்லை. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.