Valimai Update: அதிரடியா ஒரு வலிமை அப்டேட்... ரிலீஸுக்கு இன்னும் வெய்ட் பண்ண ஆரம்பிப்பீங்க..!

Valimai Movie Latest Update: முன்னதாக, ரஷ்யா செல்வதற்காக துபாய் விமான நிலையத்திற்கு வந்த அஜித்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Continues below advertisement

அஜித் நீண்ட நாட்களாக நடித்து வரும்  ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Continues below advertisement

போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் முதல்முறையாக  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தனர். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே, இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டின் ரீமேக்கான  ‘பிங்க்’ படம், நேர்கொண்ட பார்வை என்று தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இதே கூட்டணியில்,  ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா, ஊரடங்கு பல்வேறு இன்னல்களால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு வந்தது. தற்போது, அனைத்து பிரச்னைகளும் தீர்ந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு பணிகள் உள்ளன. இந்தப் படம் குறித்து எந்தவொரு அப்டேட்களும் வெளியாகத இருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், வலிமை(Valimai) படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற படக்குழு, கடந்த 20ஆம் தேதி முதல் மாஸ்கோவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அங்கு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. முழு படப்பிடிப்பும் செப்டம்பர் 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து, படக்குழு நாடு திரும்புகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் மற்ற பணிகள் தொடங்கப்பட்டு, படத்தை வெளியிடுவதற்காக வேலைகளில் படக்குழுவினர் ஈடுபடவுள்ளனர். தீபாவளிக்குத் திரையரங்குகளைத் தெறிக்கவிடும் என அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், முன்னதாகவே ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் டீசர்  வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

முன்னதாக, ரஷ்யா செல்வதற்காக துபாய் விமான நிலையத்திற்கு வந்த அஜித்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சிங்கிளா வெளியான இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த  ‘நாங்க வேற மாறி’  பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தத்துவப் பாடலாக இது இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் யூடியூப் டிரெண்டில் நம்பர் ஓன் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது.வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

போனி கபூர், ஹெச்.வினோத், அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ப்ளாஷ்பேக்: ரஜினியை மாற்றிய மனோபாலா... கருணாநிதியில் தொடங்கி எம்.ஜி.ஆர்.,யில் முடிந்த ஊர் காவலன்!

Continues below advertisement
Sponsored Links by Taboola