தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித். ஒரே காலகட்டத்தில் திரைத்துறையில் உள்ளே நுழைந்து படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக உள்ளனர். ரஜினி – கமல் பிரபலங்களுக்கு பிறகு அந்த இடத்தை விஜய் – அஜித் பிடித்து தங்களுக்கென்று இருவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளனர்.
விஜய்யின் கடைசி படம்:
இருவரும் ஒரே சமயத்தில் திரையில் வளர்ந்தபோது படங்களில் வசனங்கள் மூலமாகவும், வரிகள் மூலமாகவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுபோல காட்சிகள் இடம்பெற்று இவர்களது ரசிகர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியது. இருவரும் உச்சத்திற்குச் சென்றபிறகு கடந்த சில ஆண்டுகளாக அதுபோன்ற வசன மற்றும் பாடல் வரிகள் மோதல் இவர்களது படங்களில் இடம்பெறுவதில்லை.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய பிறகு திரைத்துறையை விட்டு முழுவதும் வெளியேறப் போவதாக அதிர்ச்சித் தகவலை தனது ரசிகர்களுக்கு தெரிவிித்தார். இந்த சூழலில், நடிகர் விஜய் எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய்க்காக அஜித் செய்யும் காரியம்:
விஜய் – அஜித் மிக நெருங்கிய நண்பர்களாக இல்லாமல் இருந்தாலும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். இதை இருவருமே பல இடங்களில் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் தனது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியிருப்பார். கோட் படத்தின் கிளைமேக்சிலும் தல என்ற வசனம் இடம்பெற்றிருக்கும். அஜித்தை குறிப்பிடும் விதமாகவே இந்த வசனம் இடம்பெற்றுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருந்தார்,
இந்த சூழலில், நடிகர் அஜித் தனது நண்பர் விஜய்க்காக குட் பேட் அக்லி படத்தில் விஜய்யின் பிரபல வசனம் ஒன்றை பேசப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் விஜய்யின் இத்தனை ஆண்டுகால திரைப்பட சேவையை பாராட்டும் விதமாக இந்த வசனத்தை அஜித் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி படத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியீட்டிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.