மிலாது நபி பண்டிகையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "மிலாது நபி என்று கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வலுப்படுத்த நபிகள் நாயகம் நமக்கு உணர்த்தியுள்ளார். சமூகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மற்றவர்களிடம் இரக்கம் காட்டவும், மனிதகுலத்திற்கு சேவை செய்யவும் அவர் மக்களை ஊக்குவித்தார்.


புனித குர்ஆனின் புனிதமான போதனைகளை உள்வாங்கி, அமைதியான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்" என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


கோலாகலமாக கொண்டாடப்படும் மிலாது நபி: 


இஸ்லாமிய பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது மிலாது நபி. இது இஸ்லாமியர்களின் ராபி உல் அவால் மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டு ஹிஜ்ரி காலண்டரின் படி அக்டோபர் 17 ஆம் தேதி மிலாது நபி கடைபிடிக்கப்படுகிறது.


பிறை தெரிவது பொருத்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முகமது நபிகளின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் வருகின்றன. முகமது நபி கிறிஸ்துவுக்குப் பின்னர் 570 வது ஆண்டு பிறந்தார்.


அதாவது ராபி உல் அவல் மாதத்தின் 12வது நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. இது இஸ்லாமிய தேசத்தின் பெருங் கொண்டாட்டமாக கடைபிடிக்கப்படுகிறது. மிலாது நபி நாள் நன்றியைத் தெரிவிக்கும் நாளாக. குடும்பங்களும், நண்பர்களும் இணைந்து கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகிறது. மக்கள் இந்த நாளில் கோயில்கள், மசூதிகள், தர்காக்களுக்குச் செல்கின்றனர்.


நபிகள் நாயகம்:



நபிகள் நாயகத்திற்காகவும் அவருடைய போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு நாள் மிலாது நபி/மிலாடி நபி. இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார்.


சிறு வயதிலியேயே மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் நபிகள் நாயகம். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்கினர்.