Thala 61 | தல 61 அப்டேட்: மூன்றாவது முறையாக இணையும் அஜித்-வினோத்-போனி கபூர் கூட்டணி..!

நடிகர் அஜித்தின் 61ஆவது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 61ஆவது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

Continues below advertisement

 பிரபல நடிகர் அஜித் நடித்து வரும் 60-வது திரைப்படம் ‘வலிமை’ குறித்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் என்ற ஹேஷ்டேக் வைரலாக அவ்வப்போது ட்ரெண்டாகி வருவது வழக்கம். இந்நிலையில் நடிகர் அஜித்தின் 61-வது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கெனவே இந்த மூவர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் தற்போது வேலை செய்துவருகிறது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது. 

Continues below advertisement


இந்தத் திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. எனினும் அப்போது இருக்கும் கொரோனா சூழலை பார்த்து படப்பிடிப்பு தள்ளிப்போகும் வாய்ப்பும் உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தத் திரைப்படம் வரும் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதற்கிடையே வரும் மே 1-ஆம் தேதி அஜித்தின் 50-வது பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது நிலவும் கொரோனா சூழல் காரணமாக இதனை படக்குழு ஒத்திவைத்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். கொரோனா சூழல் சரியான பிறகு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வலிமை படம் வெளியாவதற்கு அஜித் 61 படம் தொடங்கப்படும் என்று கருதப்படுகிறது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola