Ajith Wins Gold Medal: வச்ச குறி தப்பல! துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அஜித்! மொத்தம் 6! இதுதான் லிஸ்ட்!

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.*

Continues below advertisement

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

Continues below advertisement

திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி திருச்சி மாநகர கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது.

கடந்த 27ஆம் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு அவர் இலக்கை நோக்கி சுட்டார். இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

 

இதில் நடிகர் அஜித் குமார் சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். 
அஜித் குமார் அணி பதக்கம் வென்றது

இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31.07.2022) நடைபெற உள்ளது.

Continues below advertisement