100 டிகிரி பாரன்ஹீட்.. எரியும் வெயிலில் மொட்டை மாடியில் உடலுறவு! இங்கிலாந்தை அதிர வைத்த ஜோடி!

கடந்த சில நாட்களை போலவே அன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் உடலுறவு கொள்ளும் அதிர்ச்சிகரமான சம்பவம் பக்கத்து பில்டிங்கில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டு வெளியானது.

Continues below advertisement

இங்கிலாந்தின் பர்மிங்காமில் கடந்த செவ்வாய் கிழமை நண்பகல் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் உடலுறவு கொள்ளும் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சோஷியல் மீடியாவில் இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்

Continues below advertisement

இங்கிலாந்து வெப்பம்

கடந்த சில வாரங்களாகவே இங்கிலாந்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஜூலை 19 அன்று பிரிட்டனின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தது. மேற்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இதற்கு முன், கடந்த 2019-ல் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் 38.7 செல்சியஸ் பதிவானதே UK இன் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது. இந்த ஆண்டு கடும் கோடை வெப்பத்துடன் பிரிட்டன் போராடி வருகிறது. சாலைகள் கூட உருகும் அளவுக்கு வெப்பம் மிக கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வெயிலில் உடலுறவு கொண்ட ஜோடியின் வீடியோ வைரலாகிவிட்டது.

வீடியோ வைரல்

கடந்த சில நாட்களை போலவே அன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் உடலுறவு கொள்ளும் அதிர்ச்சிகரமான சம்பவம் பக்கத்து பில்டிங்கில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டு வெளியானது. அதனை எடுத்தவர்கள் இந்த காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டனர். நிர்வாணமாக இருவர் உடலுறவு கொள்ளும் அந்த வீடியோ க்ளிப் வேகமாக வைரலானது. கூடிய சீக்கிரத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை சென்று அடைந்தது. 

தொடர்புடைய செய்திகள்: RasiPalan Today, July 30: கன்னிக்கு தன வரவு... தனுசுக்கு ஆதாயம்... உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன?

மொட்டைமாடி உடலுறவு

எட்டு வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், பார்க்கிங் லாட் மாடியில் இருவரும் உடலுறவில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. அவர்கள் இருவரும் முற்றிலும் நிர்வாணமாக இருந்தனர். அந்த ஆண் மட்டும் தலையில் ஒரு தொப்பியை அணிந்திருந்தார். 

ட்விட்டர் கமெண்டுகள்

ட்விட்டரில், இந்த கொளுத்தும் வெயிலில், வியர்வையில் நனைந்து உடலுறவு கொண்டதைக் கண்ட பல பார்வையாளர்கள் திகைத்துப் போனார்கள். இங்கிலாந்தின் வெப்பம் தாளாமல் பெரும்பாலானவர்கள் குளிர்ச்சியாக இருக்க நிழல் மற்றும் ஏசி என தேடிப்போகும் நிலையில், இவர்கள் கடும் வெயிலை தேடி சென்றுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அவர்கள் சன் ஸ்க்ரீன் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று ஒருவர் கேலி செய்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola