விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி . லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் பரவி வருகின்றன.
குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற அஜித்
இன்னொரு பக்கம் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12.07 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. பல்வேறு தகவல்களால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்க மறுபக்கம் அஜித் சில்லாக தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டார். தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனுஷ்காவுடன் அஜித் இன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். சிங்கப்பூரில் அஜித் தனது குடும்பத்துடன் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி,வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பிரசன்னா , த்ரிஷா , அர்ஜூன் தாஸ் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். குட் பேட் அக்லி படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் புத்தாண்டை ஓட்டி சில காலம் அஜித் இடைவேளை எடுத்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : 143 கோடி கடன்...கங்குவா படத்தால் கார்த்தி படத்தை வெளியிடுவதில் பிரச்சனை
மமிதா பைஜூ மேல் கை ஓங்கியது ஏன்? இயக்குநர் பாலா விளக்கம்