நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா, சுஸுகி மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த ஒசாமு சுசுகிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் யாருக்கு?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல், தடுப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்திய டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நீரஜா பட்லாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
போஜ்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் பீம் சிங் பவேஷ், கடந்த 22 ஆண்டுகளாக தனது 'நயீ ஆஷா' அறக்கட்டளை மூலம் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய குழுவில் ஒன்றான முசாஹர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்துள்ளார். அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய இசை மற்றும் கலாச்சாரத்தில் இன்றியமையாத கிளாசிக்கல் தாள வாத்தியமான தவிலில் நிபுணத்துவம் பெற்ற வாத்தியக்கலைஞர் தட்சணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
எல். ஹாங்திங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நாகலாந்தில் உள்ள நோக்லாக்கைச் சேர்ந்த பழ விவசாயியான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்வீகமற்ற பழங்களை வளர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்