சிட்டிசன் படத்தில் இசைதென்றல் தேவா தான் இசையமைத்தார் என்று கூறினால் இன்றும் அதை அபேஸ் டியூன் என்றெல்லாம் விமர்சனம் செய்பவர்கள் உண்டு. அந்த அளவிற்கு, வேறு ஒரு ஜானரில் பாடல்களில் பட்டையை கிளப்பியிருப்பார் தேவா. சிட்டிசனில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அனைத்தும் ஹிட் ரகம். பின்னணி இசை இன்னும் உருக வைக்கும்.  20 ஆண்டுகளுக்குப் பின் சிட்டிசன் பாடல்களை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். எப்போதும் ரசிக்கும் பிளே லிஸ்ட் அது. 

20 Years Of Citizen: அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக்கிய ‛சிட்டிசன்’ ; விமர்சனங்களை உடைத்தெறிந்த சுப்புரமணி!

1.மேற்கே விதைத்த சூரியனே...

‛‛கூட்டுப்புழுகட்டிக்கொண்ட கூடுகல்லறைகள் அல்லசில பொழுது போனால்சிறகு வரும் மெல்ல
ரெக்கை கட்டிரெக்கை கட்டி வாடாவானம் உண்டு வெல்லவண்ண சிறகின் முன்னேவானம் பெரிதல்ல...
இதயம் துணிந்துஎழுந்த பின்னாலே இமயமலை உந்தன் இடுப்புக்குகீழே
நரம்புகள் வரம்புகள்மீறி துடிக்கட்டும் விரல்களில் எரிமலை வெடிக்கட்டும்!’’
வைரமுத்து வரிகளில் திப்பு குரலில் மேற்கே உதித்த சூரியன் இப்போது கேட்டாலும் நரம்பு புடைக்க வைக்கும்.
 

2.ஹே... ஐ லைக் யூ...

‛‛பார்த்தவுடன் உயிர்உடைத்து விட்டாய் ஐ லைக்யூ ஐ லைக் யூ பார்வைகளால்என்னை துகில் உரித்தாய் ஐலைக் யூ ஐ லைக் யூ

புத்தம் புத்தம் புதுஉதடுகளை குத்தும் குத்தும்உன் மீசை என்னை ஐயோஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ...’’

ஆங்கிலத்தை அள்ளித்தெளித்து இளசுகளை கொதிக்க வைத்த இந்த பாடல், வசுந்தரதாஸ் பாடி நடித்தது!

3.பூக்காரா... பூக்காரா...

வெண்பா கேட்டால்பெண்பா சொல்லும்முக்கால் கவிஞன் நான்சந்நியாசி சம்சாரி ரெண்டும்நான்நீ ஒற்றை முடியால்தேரை இழுப்பாய் கட்டைவிரல் அசைவில் காரியம்முடிப்பாய்இளமையினாலேஇமயத்தை உடைப்பாய்வளைவுகளாலேவானத்தை வளைப்பாய் வயசு பயல்மேல் மையம் கொள்ளும்வங்க புயலும் நான்முனிவர்களும் துருவாதமுத்தம் நான்

இந்த வரிகள் எல்லாம்... அப்போதே வேறு ரகத்தில் பாராட்டை பெற்றவை!

4.சிக்கி முக்கி கல்லு மோதுதே...

‛‛என் பசி அறிந்து பால்குடத்தை பக்கம் வைத்து போனவர்யாரோ நம்மை பூவுக்குள்ளே பூட்டிவைத்து சாவியை தொலைத்தவர்யாரோ

ஓ முத்த ஈரத்திலேஈரத்திலே எரிமலை அணைத்ததுயாரோ உன் உதட்டு வழிபள்ளங்களில் என் உயிரைபுதைத்தது யாரோ நீ நீ தானா

தேகத்தை இணைத்ததுகாவல் துறை மோகத்தைவளர்த்தது காமன் துறை கைநான்கும் மெய் ரெண்டும்பின்னும் வேலை

அப்போது சபதம்கொண்டேன் இப்போதோசலனம் கண்டேன் பெண்மூச்சு காற்று மோதி மோதிகாடு எரிய கண்டேன்..’’

காட்டுக்கும் ஒழிந்திருக்கும் போது வரும் பாடல். ஆனால் காடு பற்றி எரியும் அளவிற்கான வரிகள் இருக்கும். இசை இன்பமயம்.

5.ஆஸ்திரேலியா தேசம் வரை

இந்த பாடல் படத்தில் இருக்காது. ஆனால் கேசட்டில் முதல் பாடல் இது தான். ஹரினியின் குரல் பாடலை வேறு எங்கோ கொண்டு செல்லும். உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த பாடல் படத்தில் வைத்திருக்கலாம். ஆனால் பாடல் வைக்காமலேயே 3 மணி நேரத்தை நெருங்கியிருக்கும். நேரம் கருதி பாடலை தவிர்த்திருப்பார்கள்.  இந்த பாடலை பார்க்க முடியாது. கேட்க மட்டுமே முடியும். அந்த வகையில் நீங்கள் பலர் இந்த பாடலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. சிலர் கேட்டிருந்தாலும், அது இந்த படமா என அறியாமல் இருந்திருப்பீர்கள். கேளுங்கள், என்றும் ரசிப்பீர்கள். 

20 years of Citizen: அத்திப்பட்டி சுப்பிரமணியும்... அப்துல்லா அந்தோணியும்!