ABP  WhatsApp

’இந்த பொறுப்பு சித்த மருத்துவத்துக்கான அங்கீகாரம்!’ - கு.சிவராமன்

ஐஷ்வர்யா சுதா Updated at: 08 Jun 2021 12:08 AM (IST)

ஒரு சித்த மருத்துவரான எனக்கு கிடைத்த இந்தப் பொறுப்பினை, தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரமாக எண்ணி மகிழ்கின்றேன். தமிழரின் பெரும் அனுபவக் கோர்வையாக அறிவியல் சாரமாக இருக்கும் சித்த மருத்துவத்தை, நம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களில் இருந்து, உலகெங்கும் உள்ள மக்களுக்கு, அதன் தொன்மமும் மரபும் சிதையாது, அறிவியல் தரவுகளுடன் எடுத்துச் செல்வது என் பணியாக இருக்கும்.

மருத்துவர் சிவராமன்

NEXT PREV

தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சிக்கான கொள்கைக்குழு இன்று திருத்தி அமைக்கப்பட்டது. திட்டத்தின் துணைத்தலைவராக திராவிடப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முழு நேர உறுப்பினராக சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம.சீனிவாசன், பகுதிநேர உறுப்பினர்களாக மருத்துவர் அமலோற்பவநாதன், மருத்துவர் கு.சிவராமன், கலைஞர நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் சிவராமன் தனது முகநூல் பக்கத்தில் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்துள்ளார்.





ஒரு சித்த மருத்துவரான எனக்கு கிடைத்த இந்தப் பொறுப்பினை, தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரமாக எண்ணி மகிழ்கின்றேன். தமிழரின் பெரும் அனுபவக் கோர்வையாக அறிவியல் சாரமாக இருக்கும் சித்த மருத்துவத்தை, நம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களில் இருந்து, உலகெங்கும் உள்ள மக்களுக்கு, அதன் தொன்மமும் மரபும் சிதையாது, அறிவியல் தரவுகளுடன் எடுத்துச் செல்வது என் பணியாக இருக்கும்.- மருத்துவர் கு.சிவராமன்


 அந்தப் பதிவில், ’இன்றைக்கு ஒரு புதிய பொறுப்பு. அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பினை அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் மனமார்ந்த நன்றிகள்.


தமிழக மாநில திட்டக்குழு என்ற பெயரில் 1971 முதல் இயங்கிவந்த குழு, கடந்த ஆண்டில் 'தமிழக வளர்ச்சி மேம்பாட்டுக் குழு' என பெயர் மாற்றப்பட்டது. தமிழக அரசின் முதலமைச்சரைத் தலைவராகவும், பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களை துணைத்தலைவராகவும் கொண்டு இக்குழு, இன்று ஒன்பது புதிய உறுப்பினர்களோடு அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநில வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயிப்பது, வளர்ச்சி சிறப்புத்திட்டங்களை உருவாக்குவது, அவற்றின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பணிகளில் அரசுக்கு ஆலோசனை சொல்வது உள்ளிட்ட பல பணிகளில் இக்குழு ஈடுபடும்.


ஒரு சித்த மருத்துவரான எனக்கு கிடைத்த இந்தப் பொறுப்பினை, தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரமாக எண்ணி மகிழ்கின்றேன். தமிழரின் பெரும் அனுபவக் கோர்வையாக அறிவியல் சாரமாக இருக்கும் சித்த மருத்துவத்தை, நம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களில் இருந்து, உலகெங்கும் உள்ள மக்களுக்கு, அதன் தொன்மமும் மரபும் சிதையாது, அறிவியல் தரவுகளுடன் எடுத்துச் செல்வது என் பணியாக இருக்கும். சூழலுக்கு இசைவான, மரபு வேளாண் உத்திகளை, முழுவீச்சில் நம் தமிழ் நாட்டில் கொணர்வதற்குமான பணிகளை முடுக்கிவிடுவதும், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்மாதிரி மாநிலமாக மாற்றப் பணி செய்வதும் முக்கிய நோக்கங்களாய் இருக்கும். விசாலமான பார்வையில், நம்முன் பல இலக்குகள் உள்ளன. தமிழ் நாட்டின் நலம் நோக்கும் பல ஆளுமைகள் உலகெங்கும் உள்ளனர். எல்லோரும் கைகோர்த்து, மக்கள் நலம் சார்ந்த பல சிறந்த நகர்வுகளுக்கு முன்னெடுப்போம். நன்றி!’ எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கொரோனா பேரிடர் முதல் அலைக் காலத்தில் வைரஸுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சத்தை வளர்த்துக்கொள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் இவரது பரிந்துரையின் பேரில்தான் அரசே விநியோகம் செய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read: கொரோனாவுடன் இணை நோய் உள்ளவர்களுக்கு, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்

Published at: 08 Jun 2021 12:08 AM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.