கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் இதன் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கிய வேளையில் பலரும் வீட்டில் இருந்து தங்களின் வேலைகளை தொடர ஆரம்பித்து உள்ளனர் .

Continues below advertisement

இந்நிலையில் அதிகம் பாதிக்க படக்கூடிய துறை திரைத்துறை . ஊரடங்கு காலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் முறையிட்டது  தென்னிந்திய திரைப்பட ஊழியர் சங்கம் .தற்பொழுது , 2021 மே 31 வரை படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி  இன்று  செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான அனைத்து படப்பிடிப்பு மற்றும் பிந்தைய தயாரிப்பு, மாத இறுதி வரை நிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது .

Continues below advertisement

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.கே.செல்வமணி, "அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக அமல்படுத்திய போதிலும், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் தொகுப்பிலிருந்து ஏராளமானோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து நாங்கள் தமிழக அரசிடம் கொடுத்த மனுவை  திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் , திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான அனைத்து பணிகளையும் 2021 மே 31 வரை நிறுத்திவிடும். " என்று கூறினார் .

பின்னர் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சங்கத்தில் இருக்கும் தினசரி வேலையாட்களுக்கு முடிந்த உதவியை செய்யுமாறு சக நடிகர்களிடம் கேட்டு கொண்டார் . கடந்த ஆண்டு பல நடிகர் நடிகைகள் லைட் மேன் மற்றும் பலருக்கு தங்களால் இயன்ற உதவியை செய்தார்கள் .இந்தாண்டும் அவர்கள் உதவி செய்தல் ஊழியர்களுக்கு மிக உதவியாக இருக்கும் . மேலும் அரசாங்கம் மக்களுக்கு தரும் 2000 ரூபாய் தருமாறு கோரிக்கைகளை அந்த பேட்டியில் முன்வைத்தார் .

பின்பு நடிகர் அஜித்  பெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார். இதை பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டியில் தெரிவித்தார் .தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம்  நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . உதவுவதில் தலைக்கு நிகர் தல மட்டுமே .