ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கிய இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்ரிக்க அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான இன்று, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 


முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரஹானே, புஜாரா இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்டனர். இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹனுமா விஹாரி (40*) கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அஷ்வின், தாகூர் ஆகியோரின் சில மணி நேர அதிரடியால் இந்திய அணி 200-ஐ தாண்டியது. எனினும், தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. இதனால், 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது இந்திய அணி. அதனை அடுத்து, இன்னும் மூன்றாவது நாள் ஆட்டம் முடியாததால், தென்னாப்ரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறது. 






240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இருக்கிறது தென்னாப்ரிக்கா. இதற்கு முன்பு, 2018-ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி ஜோஹனஸ்பெர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில், மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது தென்னாப்ரிக்கா வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 


போட்டி முடிய இரண்டு நாட்கள் மீதம் இருந்ததால், தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக கருதப்பட்டது. ஆனால், ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும் எடுக்க, இந்திய அணி 177 ரன்களுக்கு தென்னாப்ரிக்காவை ஆல்-அவுட்டாக்கியது. 


2018-ம் ஆண்டு நடந்தது போல, இந்த ஆண்டும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் முடிவதற்குள் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் தென்னாப்ரிக்கா அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றால், டெஸ்ட் தொடர் சமனாகும். இதனால், மூன்றாவது போட்டி தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மாணிக்கும். மாறாக, விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி வெல்லும் முதல் டெஸ்ட் தொடராக இது அமையும்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண