தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தளபதி 67 படம் குறித்த ஒரு தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டதா?
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் திரைப்படம் 'தளபதி 67'. இப்படத்தின் பணிகள் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருப்பதால் தளபதி 67 குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார்.
சம்பளம் பற்றிய கவலையில்லை :
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுன் 'தளபதி 67' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக அர்ஜுன் - விஜய் கூட்டணி சேரும் இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க சுமார் 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத், கவுதம் மேனன், நிவின் பாலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தளபதி 67' படம் ஒரு பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. மேலும் படத்தில் முக்கியமான வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதில் இருந்து வெளிப்படையாக தெரியும் தகவல் என்னவென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்த நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் சம்பளம் பற்றி கவலை படவில்லை என்பது தான். தளபதி 67 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் என கூறப்படும் நிலையில் அவர்கள் ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலம் பட்ஜெட்டை வசூலித்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தின் மத்தியில் சென்னையில் தொடங்கவுள்ளது என கூறப்படுகிறது.
எவர்கிரீன் காம்போ மீண்டும் :
குருவி, திருப்பாச்சி, கில்லி திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக நடிகர் விஜயுடன் ஜோடி சேரவுள்ளார் நடிகை திரிஷா. ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் ஜோடி மீண்டும் திரையில் இணைவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரியா ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.