தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பரீட்சியமானவர் நடிகர் பிரித்விராஜ்.கோலிவுட்டில் நடிகராக அறியப்படும் பிரித்விராஜ் மல்லுவுட்டின் சிறந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் கூட . என்னதான் நடிகராக பிரபலமடைந்தாலும் தான் ஒரு இயக்குநராக வேண்டும் என்பதுதான் பிரித்திவிராஜின் கனவு. உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கி பிரித்விராஜ் , முதன் முறையாக மோகன்லாலை வைத்து லூசிஃபர் என்னும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் ஃப்ரோ டாடி என்னும் திரைப்படத்தை இயக்க போவதாக அறிவித்தார். ட்ராயிங் பேட் ஒன்றில் பிரித்திவியின் மகள் அலங்ரிதா “ அமெரிக்காவில் வசிக்கும் அப்பா மற்றும் மகள் இருவரும் , இரண்டாம் போர் ஏற்படுவதன் காரணமாக , அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு சென்று விடுகின்றனர். பின்னர் போர் நின்ற பிறகு தன் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்” என எழுதியிருக்கிறார். அதனை பகிர்ந்த பிரித்வி இதுதான் தனது அடுத்த படத்தின் கதை, பெயர் ப்ரோ டாடி என அறிவித்தார்.
மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லான் நடிக்க உள்ளார். ஆஷிர்வாத் சினிமாசின் ஆண்டனி பெரும்பவோர் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். ஸ்ரீஜித் மற்றும் பபின் ஆகியோர் படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார். படத்தில் பிரித்விராஜ் ,மீனா, கல்யாணி பிரியதர்ஷன், உன்னி முகுந்தன், லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிஹா, சௌபின் ஷாஹிர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரித்விராஜ். படம் வருகிற ஜனவரி 26, 2022 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.