தன்னை வேலையில்லாதவர் என சொன்ன இணையவாசி ஒருவருக்கு நடிகர் அபிஷேக் பச்சன் தக்க பதிலடி கொடுத்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. 


பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும்,  நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். 2000 ஆம் ஆண்டு ஜே.பி.தத்தா இயக்கிய ரெஃப்யூஜி படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான அவர் இந்த 22 ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் அனைத்து மொழி ரசிகர்களும் நன்கு விரும்பக்கூடிய நடிகராக உள்ளார். 






அவரது சினிமா வாழ்க்கையில் தூம்,தூம்-2, தூம்-3 குரு, ஓம் சாந்தி ஓம், ஹேப்பி நியூ இயர், ஹவுஸ்புல்-3, பா, தில்லி-6, ராவணன், கேம், போல் பச்சன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. தொடந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது தாஸ்வி, த்மிழில் வெளியான ஒத்த செருப்பு படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அமிதாப்பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொகுத்து வழங்கும்  கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை அபிஷேக் பச்சன் தொகுத்து வழக்க ஹாட் சீட்டில் அமிதாப்பச்சன் அமர்ந்தது பெரும் வரவேற்பை பெற்றது. 






இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி எழும் விமர்சனங்களுக்கு சாதுர்யமாக பதிலளிக்கும் அபிஷேக் பச்சன் தற்போது அதுபோன்ற சம்பவத்தை செய்துள்ளார். அதாவது பால்கி சர்மா என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தித்தாளில் உண்மையான செய்திகளைப் பெறுவதற்கு எத்தனை பக்கங்கள் மற்றும் விளம்பரங்களை கடக்க வேண்டியிருக்கிறது. தீபாவளி விற்பனை விளம்பரங்கள் நீங்கள் பொருட்கள் வாங்குவது தொடர்பான முடிவுகளை ஏற்படுத்துமா? என பதிவிட்டிருந்தார். 






இதற்கு பதிலளித்த அபிஷேக்பச்சன், மக்கள் இன்னும் செய்தித்தாள்களைப் படிக்கிறார்களா?? என கேள்வியெழுப்பினார். அதற்கு அபிஷேக்பச்சனை குறிப்பிட்டு கருத்து பதிவிட்ட இணையவாசி ஒருவர், புத்திசாலிகள் செய்கிறார்கள். உங்களைப் போன்ற வேலையில்லாதவர்கள் அல்ல  என கூறினார். இதனால் அபிஷேக் ரசிகர்கள் டென்ஷனாகினார். ஆனால் அவரோ செம கூலாக இந்த கருத்துக்கு பதிலளித்தார். 


அதில் உங்கள் கருத்துக்கு நன்றி. சொல்லப்போனால் உளவுத்துறைக்கும் வேலைவாய்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உதாரணத்திற்கு உங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால்  உங்கள் ட்வீட் மூலம் நீங்கள் அறிவாளி இல்லை என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்! என தெரிவித்துள்ளார்.