சேலம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜரினா பேகம். இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மலபார் கோல்டு டைமன் என்ற நகைக்கடையில் தங்க நகையை வாங்கியுள்ளார். இந்த தங்க நகையில் சில பகுதிகள் பழுதாகி இருந்துள்ளது. இதனால் தனது நகையை பழுது பார்த்து தர கடந்த வாரம் ஜரினா பேகம் மலபார் கோல்ட் டைமன் கடைக்கு வந்து பழுது பார்த்து தர நகையை கொடுத்துள்ளார். பின்னர் ஜரினா பேகம் நகை கடை ஊழியர் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் தங்க நகையை கொடுத்து பழுது பார்த்து தர தெரிவித்தார். இந்த தங்க நகையின் மதிப்பு ரூபாய் 9 லட்சத்து 95 ஆயிரம் என கூறப்படுகிறது. தங்க நகையின் எடை 185.640 கிராம் ஆகும். இதன் பிறகு ஜரினா பேகம் தங்க நகை கடைக்கு வந்து தனது நகையை திருப்பித் தருமாறு கேட்டார். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் நீங்கள் தங்க நகை தரவில்லை என்றும் தங்க நகை கொடுத்ததற்கு உரிய புத்தகத்தில் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு ஜரினா பேகம் அதிர்ச்சிடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் நகைக்கடை உதவி மேலாளர் சந்திர சேகரனிடம் சென்று தனது நகையை தருமாறு கேட்டார். அப்போது நகைக்கடை உதவி மேலாளர் சந்திர சேகர், கடை ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்தார். 



அப்போது சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடைக்கு இரண்டு மூன்று நாட்களாக வராதது தெரிய வந்தது. ஜரினா பேகத்திடமிருந்து கார்த்திக் தான் தங்க நகையை வாங்கி இருப்பதும், பின்னர் அவர் தங்க நகையை வரவு வைக்காமல் திருடி சென்றதும் தெரியவந்தது. ஜரினா பேகம் வந்ததாக கூறிய தேதியில் அந்த நேரத்தின் சிசிடிவி காட்சிகள் முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு கார்த்திக் வீட்டுக்கு சென்று கடை ஊழியர்கள் பார்த்தனர். ஆனால் கார்த்திக் அங்கு இல்லை கார்த்திக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இது குறித்து மலபார் கோல்டு நகைக்கடை உதவி மேலாளர் சந்திர சேகர், நகையை திருடி சென்ற கார்த்திக் குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் அழகாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல நகை கடையில் ஊழியர் நகை திருடிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.