தனது தனிப்பட்ட குடும்ப வாழ்கையில் சந்தித்த தோல்விகள் குறித்து அவர் கூறும் போது, “ 18 வயதாக இருக்கும் போதே நான் சினிமாவிற்குவந்து விட்டேன். அதனால் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருந்தது. அதிகமாக வேலை செய்ய வேண்டியதும் இருந்தது. அதனால் நான் எனக்கு நெருக்கமானவர்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கவில்லை என்பதை நான் இன்று உணர்கிறேன். இந்த விஷயத்தில் நான் சுயநலவாதியாக இருந்து விட்டேன்” என்று பேசினார். 






மேலும் பேசிய அவர், என்னுடைய குடும்பத்தை நான் சாதரணமாக எடுத்துக்கொண்டேன். பார்வையாளர்களின் இதயங்களை ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த நான், குடும்பம் எப்படியும் என்னுடன்தானே இருக்கப்போகிறது என்று நினைத்தேன். சினிமா வாழ்கையில் மட்டுமே கவனம் செலுத்திய நான், எனக்காக காத்திருக்கும் குடும்பத்தை மறந்துவிட்டேன். குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட முடியவில்லை. ஆனால் அதற்காக தனது தொழிலைக் குறை கூற விரும்பவில்லை. இது என்னுடைய மிகப்பெரிய தவறு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.  


பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து  ‘லகான்’ படத்தில் உதவிஇயக்குநராக பணியாற்றிய கிரண்ராவை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டதாக கூறினர். முதல்மனைவி ரீனாக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இராண்டாவது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.