ஏர் இந்தியா சேர்மனாக டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் குழுமத்தின் சிஇஓவாக்கப்பட்ட இல்கர் அய்சி அப்பதவியை ஏற்க மறுத்த நிலையில் இந்த நியமனம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து கைமாறியது. பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் ஏர் இந்தியா நிறுவனம் அரசிடமிருந்து முறைப்படி டாட்டா நிறுவனத்திடம் கைமாறியது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக இல்கர் அய்சியை டாடா நிறுவனம் நியமித்தது. இவர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இதற்கு முன்பாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஏர் இந்தியாவின் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டத்தை இல்கர் அய்சி ஏற்க மறுத்துவிட்டார்.
"ஏர் இந்தியா மற்றும் டாட்டா குழுமத்துடன் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி அதை சிறப்பான ஒரு விமானமாக மாற்ற பாடுபவேன். உலகத்திலேயே மிகச் சிறந்த விமானமாக ஏர் இந்தியாவை மாற்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளேன்" என்று தனக்கு வழங்கப்பட்ட பதவியை வரவேற்று மகிழ்ச்சி ட்வீட் பதிவு செய்தவர் தான் அய்சி.
ஆனால் என்னவோ திடீரென்று அவர் அப்பதவியை ஏற்கப்போவதில்லை என அறிவித்தார். அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் ஏர் இந்திய நிறுவனம் சிஇஓவாகப் பதவி ஏற்பது குறித்து சில ஊடகங்கள் தவறான, மதச் சாயம் பூசி செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அந்தப் பதவியை நான் ஏற்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன். ஆகையால் ஏர் இந்தியாவின் சி.இ.ஓ பதவியை நான் ஏற்கப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அய்சி துருக்கி அதிபர் எர்டோகனின் ஆலோசகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மனாக டாடா சன்ஸ் குழமத்தின் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது டாடா சன்ஸ் குழும தலைவராக இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் டாடா கன்சலடன்ஸி தலைவராகவும் இருந்தார். நவ்ரோஜி சக்லாத்வாலா, சிரஸ் மிஸ்ட்ரிக்குப் பின்னர் சந்திரசேகரன் தான் டாடா கன்சலடன்ஸி தலைவராக இருந்திருக்கிறார்.
;
53 வயதான சந்திரசேகரன், 1987ல் மென்பொறியாளராகப் பணியைத் தொடங்கினார். 46 வயதில் தனது துறையில் நிபுணத்துவம் பெற்று மிக உயர்ந்த பதவியை அடைந்தார். டாடா குழுமத்தின் சிஇஓ ஆனார். இந்தியாவிலேயே இளம் வயதில் சிஇஓ ஆனவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2016ல் இவர் டாடா சன்ஸ் போர்டில் இணைந்தார். 2017ல் டாடா குழுமத்தின் சேர்மனாகப் பதவியேற்றார். தற்போது ஏர் இந்தியா சேர்மனாகவும் டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.