கடந்த 30 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கோலோச்சி வருபவர் அமீர்கான். பத்மஸ்ரீ, பத்மபூஷன், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துருக்கும் இவருக்கு, பாலிவுட் மட்டுமன்றி, இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். தாரே சமீன் பர், லகான், பிகே, தங்கல், 3 இடியட்ஸ் என பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்த பெருமையும் அமீர்கானுக்கு உண்டு. நடிப்பது மட்டுமன்றி, சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக் கேட்பது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பிரபலங்களுள் ஒருவர் அமீர்கான்.  மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறும், சத்யமேவ ஜெயதே எனும் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்னர் அமீர்கான் நடத்தி வந்தார். 




அமீர்கான், 1986 ஆம் ஆண்டில், ரீனா டுட்டா என்பவரை மணந்து கொண்டார். 16 வருட இல்வாழ்க்கைக்கு பிறகு, இவர்கள் இருவரும் 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, ஜூனைத் கான் மற்றும் இரான் கான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரான் கானிற்கு, தனது நீண்ட நாள் காதலர் நுபுர் ஷிகாரேவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 




இரான் கான்-நுபுர் ஷிகாரேவின் திருமண நிச்சயதார்த்த கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நடிகர் அமீர்கான் வெள்ளைக் குர்த்தா-வெள்ளை தாடி என மாஸாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வலைதளங்களில் கலக்கி வருகின்றன. அது மட்டுமன்றி, தனது மகள் திருமணம் செய்யவுள்ள குஷியில், நடிகர் அமீர்கான் நடனமாடும் வீடியோ வைரலாகியது.அதைத் தொடர்ந்து தற்போது நிச்சயதார்த்த ஜோடியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 






 


 


 










பிரபல ஃபிட்னஸ் பயிற்சியாளரான நுபுர் ஷிகாரே, சில மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சியில் இரா கானிடம் தனது காதலை வெளிப்படுத்தினார் . சிறிது காலமாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.