இன்று அனைவரின் அங்கமாக மாறிவிட்டது மொபைல் போன். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி கூட யாரும் யோசிப்பதில்லை. வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை நாம் சோசியல் மீடியாவில் தான் கழிக்கிறோம். அது நம்மை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது என்றாலும், நமக்கு இந்த உலகத்தை சுற்றி நடக்கும் எச்சரிக்கை, வினோதம், ஆச்சரியம், அதிர்ச்சி, மெய்சிலிர்க்கும் விஷயங்கள் மற்றும் பல விதமான நிகழ்வுகளை நொடியில் தெரிந்து கொள்ள உதவும் ஒரு மீடியமாக விளங்குகிறது சோசியல் மீடியா. அதை சரியான வகையில் நாம் பயன்படுத்துகிறோமோ என்பது தான் கேள்விக்குறி.
திறமை எங்கிருந்தாலும் அங்கீகரிக்கப்படும் :
திறமையானவர்கள் ஏராளமானோர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றலை திறமைகளை இன்று அவர்களால் எளிதில் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் அங்கீகாரம் பெற முடிகிறது. வீடியோவாக இணையத்தில் பகிரும் போது கோடிக்கணக்கான மக்களின் பார்வைக்கு அதை கொண்டு செல்ல முடிகிறது. இன்று சோசியல் மீடியாவில் பெரியவர்கள் மட்டுமின்றி சிறிய குழந்தைகளும் பின்னி பெடலெடுத்து வருகிறார்கள்.
ஏ.ஆர் ரஹ்மானின் இன்ஸ்டா போஸ்ட் :
அந்த வகையில் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வியக்கவைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் மிகவும் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது பார்வையாளர்களை மதி மயங்க வைத்துள்ளது. அதற்கு காரணம் சிறுமி ஒருவர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான ரோஜா திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'காதல் ரோஜாவே...' பாடலை கீபோர்டில் மிகவும் துல்லியமாக வாசிப்பது தான் காரணம்.
சிறுமி வசிக்கும் ரோஜா பட பாடல் :
இசை உலகில் ஒரு அசைக்க முடியாத மாபெரும் ஜாம்பவானாக சாம்ராஜ்யம் செய்பவர் ஆஸ்கார் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் இசையால் மயங்காதவர் எவரேனும் உண்டோ எனும் அளவிற்கு அனைவரையும் முழுமையாக ஆக்கிரமித்தார். மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'ரோஜா'. இப்படத்தின் 'காதல் ரோஜாவே...' பாடலுக்கு 3 வயது சிறுமி கீபோர்டில் வசிக்கும் வீடியோ ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இன்றைய தலைமுறை குழந்தைகளின் திறமைகள் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு உள்ளது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த குட்டி பாப்பா. இந்த வீடியோ லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறது.