Sikandar : மும்பையில் தொடங்கியது சல்மான்கான் பட ஷூட்டிங்.. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் சிகந்தர் அப்டேட்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கு சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியுள்ளது

Continues below advertisement

ஏ.ஆர். முருகதாஸ்

தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ. ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா , கஜினி , 7 ஆம் அறிவு , துப்பாக்கி , கத்தி , சர்கார் , ஸ்பைடர் , உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இதில் ஸ்பைடர் படத்தைத் தவிர்த்து முருகதாஸ் இயக்கிய அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 23 படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சுதீப் எளமன் ஓளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு கையாள்கிறார்கள். இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. 

Continues below advertisement

சிகந்தர்

மும்பையில் தொடங்கிய சிகந்தர் படப்பிடிப்பு

எஸ். கே 23 படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் தொடர் இந்தியில் சல்மான் கான் படத்தை வைத்து சிகந்தர் படத்தையும் இயக்குகிறார் முருகதாஸ் .ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க இருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் இன்று ஜூன் 18 ஆம் தேதி சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு  மும்பையில் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு சர்கார் படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 6 ஆண்டுகால இடைவெளி எடுத்துக் கொண்டார் முருகதாஸ். தற்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் அவர் ஒரே  நேரத்தில் இரு பிரம்மாண்டமான படங்களை இயக்கவிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Continues below advertisement