சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை இயக்குனர் பாண்டிராஜ் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கொண்டுவந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்த நிலையில், இடையில் சில படங்கள் ஒரு சறுக்கலை சந்தித்தன. மீண்டும்  டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அசத்தி வருகிறார். 


தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் ’மடோனா அஸ்வின்’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாவீரன் ‘.  இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கிறார்.  நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் மாவீரன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழுவினரின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.




மாவீரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. சிவகார்த்திகேயனின் வழக்கமான படங்களைப்போல இப்படமும் காமெடி கலந்த காதல் கதையாக இருந்தது.


உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா இப்படத்தில் நாயகியாக நடித்த நிலையில், நடிகர் சத்யராஜ் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சிவகார்த்திகேயன் திரைப்படம் காமெடிக்காகவே வெற்றி பெற்று விடும் என்பது ரசிகர்களின் பொதுவான மனநிலை. ஆனால் இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தேசிய விருந்து பெற்ற மண்டேலா படத்தின் இயக்குனர் கூட்டணியில்  வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க 


Odisha Train Derailed: ஒடிஷாவில் மீண்டும் ரயில் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. 5 பெட்டிகள் சேதம்..


Temporary Teachers: அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களா? நிரந்தர நியமனம் எப்போது?- ராமதாஸ் கேள்வி