அருண் மாதேஸ்வரன் - தனுஷ் இணையும் படத்தினைப் பற்றிய முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என சத்யஜோதி ஃபில்ம்ஸ் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக ஒரு அறிவிப்பு போஸ்டருடன் சத்யஜோதி ஃபில்ம்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. நாளை மாலை 5.30 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் பழங்காலத்து ஆயுதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் தி மெட்ராஸ் ரெஜிமென்ட் என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இதனால் இது ஒரு பீரியட் படமாக இருக்குமோ என்ற ஊகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதராசுப் படையணி அல்லது மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்பது இந்தியத் தரைப்படையின் காலாட்படைப் பிரிவுகளுள் பழைமையான ஒரு படையணி ஆகும். இது 1750-களில் துவக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திலும் விடுதலைக்குப் பிறகு இந்தியத் தரைப்படையிலும் பங்குகொண்டு பல போர்களில் சண்டையிட்டுள்ளது.


தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ‘தங்கமகன்’ படத்திற்கு தனுஷூம் அனிருத்தும் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாறன் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை மகிழ்விக்கவில்லை. அதனாலேயே திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷும், தனுஷ் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.






இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் - தனுஷ் இணையும் படத்தினைப் பற்றிய முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என சத்யஜோதி ஃபில்ம்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிவிப்பு போஸ்டருடன் சத்யஜோதி ஃபில்ம்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. நாளை மாலை 5.30 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ரசிகர்கள் தயாராக இருக்குமாறு அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறக் காத்துள்ளனர்.