விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ சேகர் (30). இவருக்கும் திண்டிவனம் சிங்கனூரை சேர்ந்த தேவநாதன் (55) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜசேகரிடம் தமிழ்நாடு மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறி அவரிடமிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 லட்சத்தை தேவநாதன் பெற்றார்.
Coonoor Helicopter Crash: பிபின் ராவத் ஹெலிகாப்டர் வெடித்தது இப்படிதான்? நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்
இதே போல் ராஜேஷ் என்பவரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சமும், மேல்மலையனூரை சேர்ந்த முருகன் என்பவரிடம் அரசு வேலைக்காக 5 லட்சமும், ஆனந்தன் என்பவரிடம் இருந்து 5 லட்சமும், மணி என்பவரின் மனைவிக்கு அரசு வேலைக்காக 3 லட்சமும், அருண்மொழிதேவனின் சகோதரியான மருவூர் அரசி, செவலபுரையை சேர்ந்த சரவணன், திருவண்ணாமலையை சேர்ந்த கங்காபாலன் ஆகியோரிடம் இருந்து தலா 5 லட்சமும், திருவண்ணாமலை பூங்காவனத்திடம் இருந்து 90 ஆயிரமும் ஆக மொத்தம் 9 பேரிடம் இருந்து 42 லட்சத்து 90 ஆயிரத்தை தேவநாதன் பெற்றுக்கொண்டு மேற்கண்ட 9 பேருக்கும் அரசு வேலை வாங்கித்தராமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவநாதன் திண்டிவனம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற போது அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், குமார் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
CDC Bipin Rawat: இந்தியாவின் முதல் முப்படை தளபதி... யார் இந்த பிபின் ராவத்?
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த மோசடியில் சென்னையை சேர்ந்த நாகராஜன், அவரது மகன் தினேஷ், பாபு என்கிற சரவணன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்களில் நாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தேவநாதனை, திண்டிவனம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தினேஷ், பாபு ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான தேவநாதன் திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்