டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று 67ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தமிழில் இருந்து சிறந்த பிராந்திய மொழி படமாக எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான விருதினை அசுரன் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும், அப்படத்தை இயக்கிய வெற்றிமாறனும் பெற்றுக்கொண்டனர். 


அதேபோல், அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். மேலும், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை டி. இமான் பெற்றார். கே.டி. (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு சிறந்த குழதை நட்சத்திர விருது வழங்கப்பட்டது.


சிறப்பு ஜூரி விருதை ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பெற்றுக்கொண்டார். இந்திய சினிமாவின் உச்ச விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, 45 வருட கலை சேவைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது. விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.


இந்நிலையில், தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், டி. இமான் ஆகியோர் வேட்டிக் கட்டிக்கொண்டு சென்று விருதினை பெற்றுக்கொண்டனர். இதனைக் கண்ட ரசிகர்கள் எங்கு சென்றாலும் தமிழ் மரபை மறக்காதவர்கள் இவர்கள் என கொண்டாடிவருகின்றனர். 



 




 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: சிறந்த நடிகர் தனுஷ்... துணை நடிகர் விஜய் சேதுபதி... டெல்லியில் தேசிய விருது பெற்ற முன்னணி பிரபலங்கள்!


Dadasaheb Phalke Award: சூப்பர் ஸ்டார் இனி.... ‛தாதா சாகேப் பால்கே’ ரஜினிகாந்த்...!


Rajinikanth Speech: ‛என்னை வாழ வைத்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி’ -விருதுக்கு பின் ரஜினி நெகிழ்ச்சி!


National Film Awards: கெத்து காட்டிய அசுரன்: இயக்குனர் வெற்றிமாறன்... தயாரிப்பாளர் தாணு தேசிய விருது பெற்றனர்!