கடந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை பொறுத்தவரை தேசிய விருது என்பது மிகவும் மதிப்புள்ள ஒரு விருதாக பார்க்கப்படுகிறது. திரைக்கலைஞர்களுக்கு திரையில் தங்களை ரசித்து கைதட்டும் ரசிகர்களிடம் இருந்து பெரும் அதே மகிழ்ச்கியை தங்களுடைய உழைப்பிற்கு ஒரு விருதாக அவர்கள் அடையும்போது அந்த மகிழ்ச்சி மென்மேலும் அதிகரிக்கும் என்றால் அது மிகையல்ல.   


விருது பெற்றவர்களின் பட்டியல் :


1. சிறந்த தமிழ் திரைப்படம் - அசுரன்
 
2. சிறந்த நடிகர் (தமிழ்) - தனுஷ் : அசுரன் திரைப்படத்திற்காக..


3. சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி : சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக..
 
4. சிறந்த பாடல்களுக்கான விருது - D. இமான் : விஸ்வாசம் படத்திற்காக..


5. ஸ்பெஷல் ஜூரி விருது - ஒத்த செருப்பு சைஸ் 7


6. சிறந்த ஒலி அமைப்பிற்கான விருது - ரெசூல் பூக்குட்டி : ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக..
 
7. சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது - நாக விஷால் : கேடி என்கிற கருப்புத்துறை படத்திற்காக..


மேற்குறிய 7 விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளது. .குறிப்பாக ஒத்த செருப்பு சைஸ் 7 மற்றும் அசுரன் ஆகிய படங்கள் 2 விருதுகளை பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான தனுஷின் அசுரன் திரைப்படம் தனுஷ் அவர்களின் வேறுஒரு பரிமாணத்தை மக்கள் முன் கொண்டுவந்தது என்றால் அதுமிகையல்ல. 


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கலங்கினேன்-களிப்பில்,<br>வணங்கினேன் - நன்றியில்! <a >pic.twitter.com/PM4ESvV4qA</a></p>&mdash; Radhakrishnan Parthiban (@rparthiepan) <a >March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


அதேபோல இரா. பார்த்திபன் அவர்களின் ஒத்தசெருப்பு திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு மயில்கல் என்றே கூறலாம். அனுதினம் தனது தனித்துவத்தால் அசத்தும் பார்த்திபன் அடுத்தபடியாக இரவின் நிழல் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். Single Take என்ற வகையில் தமிழ் சினிமாவின் அடுத்த மயில்கல்லாக அப்படம் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.