கேரள அரசின் 51 வது திரைப்பட விருதுகள் குறித்து  அறிவிப்பு நேற்று (சனிக்கிழமை) வெளியானது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இது குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் , தற்போது விருது பெற்ற கலைஞர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.  கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி கிட்டத்தட்ட 80 படங்கள் போட்டியில் கலந்துகொண்டன.  கடந்த ஆண்டு 119 படங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.




விருது பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு:


சிறந்த படம் :


கடந்த ஆண்டு வெளியாகி பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ இந்த படத்தை ஜியோ பேபி இயக்கியிருந்தார். இவருக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் கிடைத்துள்ளது.


ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் :


வெகுஜன மக்களை கவர்ந்த படம் என்ற அடிப்படையில்  அய்யப்பனும் கோஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை சச்சி இயக்கியுள்ளார்.


சிறந்த நடிகை: 


கப்பேலா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படித்தியமைக்காக அன்னா பென்னிற்கு, சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.


சிறந்த நடிகர் :


வெள்ளம் படத்தில் நடித்தமைக்காக ஜெயசூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.


சிறந்த குழந்தை நட்சத்திரம் :


நீரஞ்சன் எஸ் (கசிமிண்டே கடா)


சிறந்த இயக்குநர்: 


என்னிவர் படத்திற்காக சித்தார்த் சிவாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.


சிறந்த அறிமுக இயக்குநர்: 


கப்பேலோ படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த முகம்மத் முஸ்தஃபாவிற்கு இந்த விருது கிடைத்துள்ளது.


சிறந்த கதாசிரியர்: 


தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்காக இயக்குநர் ஜியோ பேபி, ஒரிஜினல் படத்திற்காக  இதற்கான தகுதியை பெருகிறார்.


சிறந்த இசையமைப்பாளர்: 


சூஃபியும் சுஜாதையும் என்ற ஹிட் படத்திற்கு இசையமைத்த  எம் ஜெயச்சந்திரன் பெற்றுள்ளார்.


சிறந்த பாடகர் , பாடகி :


சிறந்த பாடகியாக நித்யா மெமன், சிறந்த பாடகராக ஷபாஸ் அமான் (வெள்ளம் , ஹலால் கவ் ஸ்டோரி) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சிறந்த பாடலாசிரியர்: கடந்த ஆண்டின் சிறந்த பாடகராக அன்வர் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தேசிய விருது பெரும் டப்பிங் கலைஞர்கள்களாக  ஷோபி திலகன மற்றும் ரியா சாய்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இம்முறை பெண்களுக்கான சிறப்பு விருதுகள், திருநங்கை பிரிவில் நான்ஜியம்மா தேசிய விருதை கைப்பற்றியுள்ளார்.


சிறந்த கலை இயக்குநர்: சந்தோஷ் ராமன் ( மாலிக், பயலி)


சிறந்த எடிட்டர் : மகேஷ் நாராயணன் (சி யூ சூன்)


சிறந்த நடன கலைஞர்கள் :
லலிதா சோபி, பாபு சேவியர் (சுஃபியும் சுஜாதையும் )