2021-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் துபாய் மைதானத்தில் நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 


டாப் 5 அதிக விக்கெட்டுகள் :



  1. ஹர்ஷல் படேல் :




பெங்களூர் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல். இந்த தொடர் மூலம் பலராலும் உற்று கவனிக்கப்பட்ட வீரர்களில் முக்கியமானவர். அவர் 15 போட்டிகளில் ஆடி மொத்தம் 56.2 ஓவர்களை வீசியுள்ளார். 459 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நடப்பு தொடரில் அவர் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார். இதனால், அவரை “பர்ப்பிள் படேல்” என்று செல்லமாக அழைக்கின்றனர். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.



  1. ஆவேஷ்கான்:




டெல்லி அணி குவாலிபயர் போட்டி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவேஷ்கான். ஹர்ஷல் படேலைப் போல தனது பந்துவீச்சு மூலமாக பலரையும் திரும்பி பார்க்கவைத்தார். இவர் 16 போட்டிகளில் ஆடி 61 ஓவர்கள் வீசி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் 450 ரன்களை விட்டுக்கொடுத்த ஆவேஷ்கான் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறப்பான பந்துவீச்சு ஆகும்.



  1. ஜஸ்பிரித் பும்ரா:




மும்பை இந்தியன்ஸ் முதன்மை பந்துவீச்சாளரான பும்ரா நடப்பு தொடரில் 14 போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் அதிகபட்சமாக 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இந்த தொடரில் பதிவாகியுள்ளது. அவர் இந்த தொடரில் 410 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.


      4.ஷர்துல் தாக்கூர்:




சென்னை சூப்பர் கிங்சின் ராசிக்கார பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர் 16 போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் 59.5 ஓவர்கள் வீசி 527 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதற்கு இறுதிப்போட்டியில் அவரது சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம் ஆகும்.


       5.முகமது ஷமி:




பஞ்சாப் கிங்சின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த தொடரில் சிறப்பாகவும், சிக்கனமாகவும் பந்துவீசியுள்ளார். அவர் 14 போட்டிகளில் ஆடி 52.4 ஓவர்கள் வீசி 395 ரன்களை மட்டுமே வழங்கியுள்ளார். அவர் மொத்தம் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண