கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.


சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளது. இங்கு நேற்று சசிகலா அஞ்சலி செலுத்தவந்தார். அப்போது அவருடன் ஏராளமான தொண்டர்களும் வந்திருந்தனர். ஜெ. நினைவிடமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புக்காக ஜெ. நினைவிடத்தில் 3000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொண்டர்கல் புடைசூழ வந்த சசிகலா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்கலங்க அவரைப் பார்த்து தொண்டர்கள் குரல் எழுப்ப அந்த இடமே சில நிமிடங்கள் உணர்சிப் பூர்வமாக மாறியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி 20 பேரிடம் ஜேப்படி திருடர்கள் கைவரிசையைக் காட்டினர். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்.




சசிகலா வியூகம் என்ன?


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் அவர் விடுதலையானார். அவரது விடுதலையால் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும், அதிமுக அமமுக இணையும், தேர்தல் கூட்டணிகள் மாறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். அனைவரும் ஒற்றுமையுடன் ஜெயலலிதா ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என்றொரு அறிக்கை வெளியிட்டார். தேர்தலில் அதிமுக வெற்றிக்காக அவர் அவ்வாறு தெரிவித்ததாகவே கூறப்பட்டது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பின்னர் சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலும் அவர் அதிமுகவை மீட்பது பற்றியே பேசியிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.


ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை எதிர்ப்பதில் அதிமுகவில் ஜெயக்குமார் தான் இன்னும் அதிதீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் ஓபிஎஸ் மனைவி மறைவின்போது சசிகலா நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அதிமுகவில் எப்படியாவது நுழைந்துவிட சசிகலா தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரது வியூகம் முழுக்க அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகவே இருக்கிறது என சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க :


ஓபிஎஸ், இபிஎஸ் கண்களைப்போல கழகத்தை காக்கவேண்டும் - அதிமுக பொன்விழாவுக்கு அண்ணாமலையின் வாழ்த்து