தென்னிந்திய சினிமாவின் கியூட் நடிகை சமந்தாவின் ஹெல்தி டயட் பிளான் பிளான் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் ரசிகர்களுக்கு நிச்சயம் ஆர்வமாக இருக்கும்.  


நல்ல காலை உணவுடன் தொடங்கும் அந்த நாள் நிச்சயம் உங்களை  சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்து கொள்ளும். எனவே அவை சுவையோடு சேர்த்து ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். சமந்தாவின் பிரேக் ஃபாஸ்டில் வெட்டப்பட்ட வாழைப்பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூபெர்ரிகள், பாதாம், பிஸ்தா மற்றும் சில சியா விதைகள் நிச்சயமாக இடம்பெறும். இதை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து இருந்தார். அவரை போலவே நீங்களும் ஃபிட்டாக இருக்க விருப்பமா அப்படியென்றால் நிச்சயமாக நீங்கள் உங்களின் அன்றாட காலை உணவுக்கான சில ஆரோக்கியமான ரெசிபிகளை இங்கே பார்க்கலாம்:


 



ரெசிபி:1 பீச், ராஸ்பெர்ரி மற்றும் நட்ஸ் ஸ்மூத்தி ரெசிபி 


இந்த கலவையின் ஸ்மூத்தியில் நட்ஸ் மற்றும் பழங்களின் கலவை இருப்பதால் இதை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என  சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த ரெசிபிக்கு மேலும் கிரீமி சுவையை கூட்ட சிறிது தயிர் கலந்து கொள்ளலாம். 



ரெசிபி:2 ஓட்ஸ் தயிர் மற்றும் பழங்கள் 


காலை உணவிற்கு மிகவும் சிறப்பான சத்து நிறைந்த உணவு ஓட்ஸ் என்பது அனைவரும் அறிந்தது. எனவே பலரும் இதை உணவில் ஒரு பகுதியாக சேர்த்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இது சிறிது காலத்திற்கு பிறகு சலிப்பை கொடுக்கலாம். எனவே அதை ஒரு ஸ்வாரஸ்யமான ரெசிபியாக மாற்ற அதில் சில பழங்கள், நட்ஸ்கள், தயிர், இலவங்க தூள் சேர்ப்பதால் டேஸ்ட்டி பிரேக் ஃபாஸ்ட்டாக இருக்கும். 


 



ரெசிபி 3 : வால்நட், பெர்ரி மற்றும் பீட்ரூட் ஸ்மூத்தி 


இந்த ஸ்மூத்தியில் பெர்ரி, அக்ரூட் மற்றும் பீட்ரூட்டின் நன்மைகள் அடங்கியுள்ளதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த ஸ்மூத்தி தயார் செய்ய பீட்ரூட், பெரிஸ், ஓட்ஸ் மற்றும் இஞ்சி சேர்த்து மற்றும் பால் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த ஸ்மூத்தியை அக்ரூட், ப்ளூ பெர்ரி மற்றும் புதினா இலைகளை வைத்து அலங்கரித்து பரிமாறவும். 


ரெசிபி 4 : வாழைப்பழம் மற்றும் பாதாம் கஞ்சி 


மிகவும் பிஸியான காலை நேரங்களில் இந்த உணவை மிகவும் சுலபமாக 15 நிமிடங்களில் தயாரித்து விடலாம். உங்களின் ஓட்ஸ் ரெசிபியில் கொஞ்சம் நட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். ருசியான ரெசிபி தயார். 


ரெசிபி 5 : சாக்லேட் அகாய்


ஒரு கப் சாக்லேட் அகாய் மார்னிங் பிரேக் ஃபாஸ்ட்டுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் எளிமையானது. சுவையான கோகோவுடன் பெர்ரி, கிரானோலா மற்றும் மொறுமொறுப்பான நட்ஸ் சேர்த்து பரிமாறலாம். இதில் சாக்லேட் பயன்படுத்தப்படுவதால் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு டிலைட்டாக இருக்கும்.