பிரம்மாண்டமாகக் கட்டப் பட்ட லூலூ சூப்பர் மார்க்கெட்டை உத்தரபிரதேச முதலமைச்ச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.


லூலூ ஹைப்பர் மார்க்கெட் திறப்பு:


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்திருக்கும் லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்த்தின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலைத் திறந்து வைத்து அதனை பார்வையிட்டார். அந்த மாலில் உள்ள வசதிகள், மற்றும் மக்களை ஈர்க்கும் முக்கியமான பொழுதுபோக்கு போன்ற முக்கியமான சில விஷங்களை ஆய்வு செய்தார். அப்போது லூலூ குரூப்பின் சேர்மல் யூசுப் அலி, உத்தரபிரதேச சபாநாயகர் சதிஷ் மஹனா, முன்னாள் துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா உள்ளிட்ட பலர் இருந்தனர். லூலூ மாலானது கடந்த 2019ல் நடைபெற்ற மிகப்பெரிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.




5வது மால்:


லக்னோவில் மாலை திறந்ததன் மூலம் நாட்டில் கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் திருச்சூர் ஆகிய 4 இடங்களில் உள்ள மால்களுக்கு அடுத்து 5வதாகத் திறக்கப்பட்ட மால் இதுவாகும். லூலூ மால் திறப்பது பற்றி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து பேசினேன். அப்போது லூலூ லக்னோ கிளை திட்டத்தைப் அவருக்கு விளக்கினேன். நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள் . அரசு உங்களுக்கு உதவி செய்யும் என்று உடனடியாக பதிலளித்தார் என்று லூலூ சேர்மன் கூறியுள்ளார்.




லூலூ மாநில உள்ள 5 சிறப்பம்சங்கள் பற்றிப் பார்க்கலாம்.


லக்னோவில் திறக்கப்பட்டுள்ள லூலூ மாலானது, லூலூ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 235-வது மூலதனமும் அவற்றில் மிகப்பெரியதும் கூட. இந்த மாலானது சுமார் 22 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இந்த மாலால் நேரடியாக 4,800 பேரும், மறைமுகமாக சுமார் 10,0000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.




இந்த மாலில் 15 ரெஸ்டாரண்டுகள் மற்றும் மிகப்பெரிய உணவு விடுதி மற்றும் 25 பிராண்ட் கடைகள் உள்ளன. இவற்றில் 1600 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.


திருமண பர்சேசுகளுக்கென்றே, நகைகள் விற்பனை உள்பட பிரத்யேக பகுதியும், ஃபேஷன் மற்றும் ப்ரீமியம் வாட்ச் ப்ராண்ட் கடைகளும் இருக்கும்.


ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!


இந்த மாலில் 7 லட்சம் சதுர அடி கொண்ட 11 அடுக்கு பார்க்கிங் வசதி உள்ளது. இதில் சுமார் 3 ஆயிரம் வாகனங்களை நிறுத்த முடியும். வரும் ஆண்டில் 11 பிவிஆர் சூப்பர் பெளெக்ஸ் தியேட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும்.


குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க ஃபன்ச்சுரா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை மகிழ்ந்து பொழுதைப் போக்கும் தளமாக இது இருக்கும்.