சென்னை ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பின் ஒருவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது பெண் ஒருவர் உள்ளதாக அந்த புகார் . மனு தெரிவித்திருந்தார். 14 வயது உள்ள ,  மாணவிக்கு கல்விக்கு உதவும் என்பதற்காக செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போன் மூலம் அடிக்கடி மாணவி லுடோ விளையாட்டை விளையாடி வந்துள்ளதாக தெரிகிறது

 



லூடோவில் திருவெற்றியூரைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான ஜோக்கர் என்கிற விக்னேஷ் என்பவர் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். இந்நிலையில், இவர்களிடையே நட்பு வளர்ந்ததை அடுத்து, செல்போன் எண் பரிமாறி டெலிகிராம் போன்ற ஆப் வழியாக பேசி வந்துள்ளனர். இதில், இருவரும் நெருங்கிப் பழக துவங்கியுள்ளனர். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் தன்னை காதலிக்குமாறு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவி தன்னிடம் வீடியோ காலில் பேசியது உள்ளிட்டவற்றை, ரெக்கார்ட் செய்து கொண்டு அதை வெளியிட்டு விடுவேன் என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

 



ஒரு கட்டத்தில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத பொழுது இந்த வீடியோக்கள், ஆகியவற்றை சிறுமியிடம் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் எடுத்து பதிவு செய்ததாக தெரிகிறது.  இதனால் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது நடந்தவற்றை கூறிய சிறுமி அழுதுள்ளார்.

 





இதனை அடுத்து பெற்றோர் விக்னேஷிடம், இது தொடர்பாக விசாரித்துள்ளனர். எனக்கு ஒரு வீடியோவிற்கு ரூ.25 ஆயிரம் வீதம் என்னிடம் இருக்கும் அனைத்து வீடியோவையும் உங்களிடம் தர வேண்டும் என்றால் சுமார், 50 லட்சம் ரூபாயை உடனடியாக தர வேண்டும். இல்லையென்றால் உனது மகள் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் எனக்கூறி  தனது அக்கவுண்ட்  எண்ணையும் அனுப்பி பணம் கேட்டுள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விக்னேஷ் மீது போக்சோ, பெண் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த பின்னர் அவரை, திருவள்ளூர் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.