விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை. பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் இது. இந்த படம் வெளியாகி நேற்றோடு நான்கு ஆண்டுகள் ஆகிறது.






மேற்கு தொடர்ச்சி மலை பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வியலை மிகவும் தத்ரூபமாக திரையில் காட்டிய திரைப்படம் 'மேற்கு தொடர்ச்சி மலை'. புதுமுக கதாநாயகர்கள் ஆண்டனி காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. கமர்சியல் திரைப்படங்கள் அதிகமாக வெளிவரும் சூழலில், திரைக்களத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் இது. புது முகங்களை வைத்து வாழ்வியல் சம்பந்தமான திரைக்கதை.  




மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் ஒரு சாமானியன் தனக்கென சொந்தமாக ஒரு நிலம் வாங்க ஆசைப்படுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவனது கனவு தள்ளி தள்ளிப்போக இறுதியில் அவன் அந்த நிலத்தை வாங்கினானா அல்லது நயவஞ்சர்களால் வீழ்ந்தானா என்பதே திரைப்படத்தின் கருவாக அமைந்திருந்தது.


நான்கு ஆண்டுகளை கொண்டாடும் விஜய் சேதுபதி!


படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை வாசம் வீச மக்களின் உள்ளூர் பாஷை நாமும் அந்தப் பகுதியிலே வசித்து வருவது போன்ற உணர்வை நமக்கு அளித்தது. மேலும் இயக்குநர் கதையை கையாண்ட விதம் பெரும் பாராட்டு பெற்றது. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ஒரே படத்தில் மிக எளிமையாக காட்டியிருப்பார் இயக்குநர். கமர்சியல் படம் இல்லையென்றாலும் ஒரு வாழ்வியல் குறித்த கதை என்பதால் மக்களிடையே குறிப்பாக சினிமா ஆர்வலர்கள் இடையே பெரும் பாராட்டை பெற்ற படம் இது. இந்த படம் வெளியாகி இன்றோடு நான்கு ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






கமர்சியல் திரைப்படங்கள் அதிகமாக வெளிவரும் சூழலில், திரைக்களத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் இது. புது முகங்களை வைத்து வாழ்வியல் சம்பந்தமான திரைக்கதை.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண