மஜிலி திரைப்படத்தின் மூன்றாண்டு நிறைவை அடுத்து அது குறித்த இன்ஸ்டா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் சமந்தா. இயக்குநர் சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு சமந்தா மற்றும் நாகசைதன்யா நடிப்பில் வெளியான காதல் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் மஜிலி. படம் படு ஹிட்டானது. இதற்கிடையே படத்தின் மூன்றாண்டு நிறைவை ஒட்டி அதைப் பற்றி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சமந்தா.


 






 


இதற்கிடையே நடிகர் நாதசைதன்யாவையும், நடிகை சமந்தாவையும் இணைந்து நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு இயக்குநரான நந்தினி ரெட்டி இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சமந்தாவின், ஜபர்தஸ்த், ஓ பேபி உள்ளிட்ட படங்ககளை இயக்கிய இவர் தனது அடுத்தப்படத்தில் இருவரையும் ஒன்றாக நடிக்கவைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். முன்னதாக ஓ பேபி ஷூட்டிங்கில் இருக்கும் போது சமந்தாவிடம், நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடிக்கும் வகையில் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் தொடர்ந்து சமந்தாவை சிரமப்படுத்த விரும்பாத அவர், நாகசைதன்யாவை கதாநாயகனாகவும், நாயாகியாக வேறொருவரை நடிக்க திட்டமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் சமந்தா ருத் பிரபு நடிக்கும் அடுத்த படமான யசோதா, ஹரிசங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் சமந்தாவுடன் நடிகர் வரலட்சுமியின் அண்மையில் திரைப்படக் குழுவுடன் இணைந்துள்ளார். இதற்கிடையே தற்போது படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.


தொடர்ச்சியாக படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சமந்தா தனது அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கான அறிவிப்புகள் வருகின்றன இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சமந்தா நடிப்பில் உருவாகிவரும் சகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.