இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிருஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை , மதுரையில் பள்ளிக்குழந்தைகள் சிலருடன் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






மதுரையில் உள்ள மவுண்டன் வியூ பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்தான் கத்ரினா கைஃப் பங்கேற்றிருக்கிறார். ஆதரவற்ற மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது . இந்த பள்ளியை கத்ரினா கைஃபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார். அங்கேயே ஆசிரியையாகவும் இருந்து கற்பித்தும் வருகிறார். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . தனது அம்மாவால் நடத்தப்படும் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டத்தில்தான் கத்ரினா கைஃப் சமீபத்தில் பங்கேற்று, அவர்களுடன் நடனமாடியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் 96,000-க்கும் மேற்பட்ட பார்வைகளையும் கிட்டத்தட்ட 5,000 மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.






2020-ஆம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில், இதே பள்ளியில் வசதியற்ற குழந்தைகளுக்கான வகுப்பறைகளைக் கட்டுவதற்கு நன்கொடை வழங்குமாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்ரினா கைஃப் கோரிக்கை விடுத்திருந்தார். அதில் “அதிகமான குழந்தைகள் அவர்களின் கனவுகளை நனவாக்க நம்மால் முடிந்ததை செய்வோம். நாம் இருக்கும் கடினமான காலங்களைக் கருத்தில் கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பது இன்னும் முக்கியமானது” என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டி வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.