முகத்தில் இத்தனை ரீயாக்ஷன் ஒரே சமயத்தில் காட்ட முடியுமா எனும் அளவிற்கு ரீயாக்ஷன் குவீன் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாக ஏராளமான ரசிகர்களை ஜிவ்வென இழுத்தவர் நடிகை ஜோதிகா. இந்த தமிழ்நாட்டு மருமகள் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹேப்பி பர்த்டே ஜோ மேம் !!!


 



2 டி என்டர்டெயின்மென்ட் :


தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்த ஜோ சமீப காலமாக தனது காதல் கணவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் எனும் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். இவர்களின் முதல் தயாரிப்பான "36 வயதினிலே" திரைப்படமே சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து தயாரிப்பது தான் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். நடிகர் சூர்யா நடிப்பில், 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 2020ம் ஆண்டு  வெளியான "சூரரை போற்று"  திரைப்படம் பல பிரிவுகளில் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


ட்விட்டர் மூலம் வாழ்த்து :



இன்று பிறந்தநாள் காணும் நடிகை ஜோதிகாவிற்கு தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள். எங்கள் நிறுவனத்தின் ஸ்ட்ராங்ஸ்ட் பில்லர் ஆஃப் சப்போர்ட். பலரின் ரோல் மாடல் மற்றும் இன்ஸ்பிரேஷனாக இருக்குறீர்கள் !!! என வாழ்த்தியுள்ளனர். 


 






 


கணவரின் பக்கபலம் :



ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை ஜோதிகா அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். பெற்றோர் சம்மதத்துடன் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு முழுமையான தமிழ்நாட்டு பெண்ணாக மாறிய ஜோதிகா தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில், வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களை தெரிந்தது நடித்து வருகிறார். இன்றும் அவரின் நடிப்பாலும், அழகாலும் ஏராளமான ரசிகர்களை தக்க வைத்துள்ளார். கணவருக்கு பக்கபலமாக இருந்து வரும் ஜோதிகா 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திலும் தனது ஈடுபாட்டை முழுமையாக கொடுத்து வருகிறார். 


சமீபத்தில் வெளியான தகவலின் படி 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பாலிவுட் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அதற்காக குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாக போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. 


ஒன்ஸ் மோர் விஷ் யூ ஹாப்பி ஹாப்பி பர்த்டே ஜோ !!!