26 years of Once more : வின்டேஜ் விஜய் தான் என்றுமே எங்கள் சாய்ஸ்... 26 ஆண்டுகளை கடந்த பின்பும் ஒன்ஸ் மோர் கேட்க தூண்டும் ரகம் 

காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தின் கலவையாக அமர்க்களமான ஒரு வெற்றி படமாக 26 ஆண்டுகளை கடந்த பின்பும் ஒன்ஸ் மோர் கேட்க வைக்கும் படம் 'ஒன்ஸ் மோர்'  

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் என கொண்டாடப்படும் விஜய் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களாகவே தற்போது இருந்து வருகிறது. ஒரு கமர்சியல் நாயகனாக இருந்த விஜய்க்கு ஒரு வித்தியாசமான தோரணை கொடுத்தது காதல் படங்களே. அவரை ஒரு ஜனரஞ்சகமான கலைஞனாக உச்சத்தில் கொண்டு சேர்த்தது சென்டிமென்ட் கலந்த குடும்ப படங்கள் மற்றும் காதல் படங்களே என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி அவரின் திரை வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத மைல்கல் படமாக அமைந்தது தான் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்றும் அந்த வின்டேஜ் விஜய்யை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள். 

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி என மாபெரும் கலைஞர்களுடன் நடிக்க விஜய்க்கு கிடைத்தது ஒரு மாபெரும் ஜாக்பாட். விஜய் - சிம்ரன் காம்போ என்றுமே தூள் தான் அந்த வகையில் அவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்த முதல் படம் இதுவே. விஜய் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். அப்படி அவர் இயக்கத்தில் விஜய் நடித்த 6வது படம் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தின் கலவையாக அமர்க்களமான ஒரு படமாக வெற்றி பெற்றது. 

கௌரவ கதாபாத்திரங்களாக நடிகர் திலகமும், கன்னடத்து பைங்கிளியும் நடித்திருந்தாலும் அவர்களின் கிளாசிக் காட்சிகள் மலரும் நிறைவுகளை பூக்க செய்தது. யூத் விஜய் தனது வழக்கமான துறுதுறுப்பான துள்ளல் நடிப்பால் ரசிகர்களை கவர சிம்ரன் தனது வசீகரமான தோற்றத்தால் அழகால் ரசிகர்களின் நெஞ்சங்களில் டைரக்ட் என்ட்ரி கொடுத்தார். நேருக்கு நேர், ஒன்ஸ் மோர், லவ் டுடே  என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார் விஜய். 

 

ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரு கதாநாயகன் பொறுப்பில்லாமல் திரியும் ஒரு கேரக்டரில் அசாதாரணமாக நடித்திருந்தார். அதே சமயம் விஐபி படத்திற்கு பிறகு சிம்ரன் நடித்த இப்படம் அவருக்கு நல்ல பாராட்டுகளை பெற்று கொடுத்தது. ஒரு பார்பி டால் போல வந்து அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் சிம்ரன் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது தான் இன்று வரையில் பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர்களில் ஒருவராக திகழ்கிறார்கள். 

தேனிசை தென்றல் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அடி தூள் ரகம் தான். இளவட்ட பசங்க அனைவரையும் ஊர்மிளா ஊர்மிளா என்றும்  ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா என டீனேஜ் பெண்களுக்கு ரூட் விட வசதியாக மெட்டமைத்து இருந்தார். ஒட்டுமொத்தத்தில் அனைத்து கலவையும் கலந்த ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது ஒன்ஸ் மோர் திரைப்படம். 

Continues below advertisement