தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "சூப்பர் டீலக்ஸ்" . படம் வெளியாகி மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது . முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த படம் "சூப்பர் டீலக்ஸ் " இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி "தேசிய விருது " பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
கடினமான சூழ்நிலைகளில் சிக்கியுள்ள வெவ்வேறு நபர்களைப் பற்றிய நான்கு கதைகளின் தொகுப்பு இந்தப் படம். இந்த நான்கு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது என்பதை தியாகராஜன் குமாரராஜா அவருக்கே உண்டான பாணியில் எடுக்கப்பட்ட படம் "சூப்பர் டீலக்ஸ்". விஜய் சேதுபதி ,காயத்ரி, ரம்யாகிருஷ்ணன் , மிஸ்கின் , ஃபஹத் பாசில், சமந்தா மற்றும் பலர் தங்களின் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்தனர் .யுவன் சங்கர் ராஜாவின் இசை "செர்ரி அன் தி டாப் " என்பது போல் அமைத்து இருந்தது .
படத்தின் மற்றொரு அங்கமாக இருப்பது ஒளிப்பதிவு , பி.ஸ்.வினோத் மற்றும் நிரோவ் ஷா இருவரின் கைவண்ணம் படத்திற்கு மற்றொரு உயிர்ப்பை கொடுத்தது . குறிப்பாக கடைசி கிளைமாக்ஸில் ஷில்பா (விஜய் சேதுபதி ) மற்றும் அற்புதம் (மிஸ்கின்) சந்தித்துக்கொள்ளும் காட்சியில் வசனங்களுடன் இணைந்து ஒளிப்பதிவும் கதைக்கூறி இருக்கும் .
பல ஆண்டுகள் கழித்து தனது மகனை பார்க்க திருநங்கையாக மாறி வரும் ஷில்பா (விஜய் சேதுபதி ) ."நீ ஆண் அல்லது பெண்ணோ... எனக்கு நீ அப்பா, என்கூடவே இரு " என்று ஷில்பாவின் மகன் ராசுக்குட்டி பேசும் வசனங்கள் . தனது மகனை துளைத்துவிட்டு விஜய்சேதுபதி தனது தவறை உணரும் தருணம் அனைத்தும் உணர்ச்சிபொங்க மிகவும் எதார்த்தமாக கதை கூறப்பட்டு இருக்கும் .
சமந்தா, ஃபஹத் பாசில் திருமணம் ஆகி இருவரும் ஒரு சர்சையில் சிக்குகின்றனர் . கணவன் மனைவிக்கான புரிதலை இந்த சர்ச்சைக்குரிய பிரச்சனை எவ்வாறு தீர்த்துவைக்கிறது . பல திரைக்கதையின் மூலம் பல உணர்ச்சிகளை கடத்துகிறது படம் . மொத்தம் நான்கு கதைகள் அதன் கதாபாத்திரங்களை கொண்டு காதல், பக்தி, செக்ஸ், மனித மூலையில் ஒளிந்து கிடக்கும் கருப்பு பக்கம் ,நியாயம்,நடைமுறை என்று அனைத்து உணர்ச்சிகளையும் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவின் மூலம் தெறிக்கவிட்டபடம் .
திரை ரசிகர்கள் கொண்டாடிய அத்திரைப்படத்தை தற்போது தமிழ் திரைப்பட ரசிகர்கள் மீண்டும் கொண்டாடத்துவங்கியுள்ளனர். ட்விட்டரில் #2yearsofsuperdeluxe என்று ரசிகர்கள் மீண்டும் படத்தை கொண்டாடி வருகின்றனர் .விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தியாகராஜன் குமாரராஜா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் .
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a >#2YearsOfSuperDeluxe</a> ☺️ <a >pic.twitter.com/t8Ao0Df9Gt</a></p>— VijaySethupathi (@VijaySethuOffl) <a >March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>