தெய்வத்திருமகள் செண்டிமென்ட் மதிப்புள்ள திரைப்படங்களை வெறுக்கும் மக்களின் இதயங்களைக் கூட தொடும் ஒரு திரைப்படமாகும். அந்த படத்தின் பாதிப்பு ஒரு கதாபாத்திரத்தின் திடீர் மரணம் அல்லது நீண்ட உணர்வுபூர்வமான உரையாடல்களால் இருக்காது, மாறாக உணர்ச்சிகளால் உங்கள் இதயத்தைத் தொட்டு அமைதியாக கண்ணீர் விடச் செய்யும். இப்படம் நிச்சயம் அப்பா மகளின் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும். எந்தவிதமான வியத்தகு திருப்பங்களும் இல்லாமல், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் நிரம்பிய இப்படம் இன்று தனது 11 வருடங்களை நிறைவு செய்கிறது.




ஏ.எல்.விஜய் எழுதி இயக்கிய தெய்வத்திருமகள் 2011-ன் மெலோடிராமா திரைப்படமாகும். அறிவுக் குறைபாடு மற்றும் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவனின் முதிர்ச்சியுடன் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சாரா அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், நாசர், சந்தானம், சச்சின் கெடேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த அத்திரைப்படத்திற்கு, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார். 


கச்சிதமான பின்னணி இசை மற்றும் பாடல்களால் நம் இதயம் தொடுவதை ஜீ.வி., உறுதி செய்திருப்பார். இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான ”ஐ ஆம் சாமின்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இதில் சான் பென் ஒரு வளர்ச்சி குறைபாடுள்ள தந்தையாக நடித்திருப்பார்.


விக்ரமின் முதல் மூன்று சிறந்த படங்களில் இந்தப் படம் கண்டிப்பாக இடம்பெரும். மாற்றுத்திறனாளிகள் மீது அனுதாபம் காட்டுவதை விட, அவர்களில் உள்ள நல்ல குணங்களை இப்படம் காட்டுகிறது. ஒவ்வொரு போக்குவரத்து விதிகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் பொறுப்பான இயல்பு மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டல் அறையில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்போது அவர்களின் அறிவையும் வெளிப்படுத்துகிறது. தெய்வத்திருமகள் , விக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் அனைத்து குறைபாடுகளையும் மீறி பகிர்ந்து கொள்ளும் அழகான பந்தத்தையும் காட்டுகிறது.




தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள மென்மையான மற்றும் அழகான உறவை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது. கிருஷ்ணா (விக்ரம்), அவர் குழந்தையின் முதல் வார்த்தை "அப்பா"- வாக இருக்கவேண்டும் என்று விரும்புவார், அது சாத்தியமில்லை என்று அவரைச் சுற்றியுள்ள அனைவரும் சொல்ல முயற்சிப்பார்கள். ஆனால் குழந்தையின் முதல் வார்த்தை உண்மையில் அப்பாவாக இருக்கும் போது, ​​கிருஷ்ணனால் தனது மகிழ்ச்சியை அடக்க முடியாமல், அவர் கைதட்டி நடனமாடி கொண்டாடுவார். படத்தின் மிக அழகிய காட்சிகளில் ஒன்றான இது, பார்ப்பவர்களை நிச்சயம் கண்கலங்க வைக்கும்.


Also Read | Actor Pratap Pothen : பிரபல இயக்குநர், நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..!


வார்த்தைகளை விட செயல்கள் சத்தமாக பேசும், என்பதை கிருஷ்ணாவும் நிலாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற அறையில் சந்திக்கும் போது நாம் உணர்வோம். ஒரு தொடர் நடனம் மூலம் அவர்கள் பேசி தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகள், முழு நீதிமன்ற அறையையும் கண்ணீர் மற்றும் கனத்த இதயத்தோடு விட்டுச்செல்லும். இந்த காட்சியின் பாதிப்பு பார்வையாளர்களையும் மிகவும் பாதித்தது.




க்ளைமாக்ஸை நோக்கி, தன் மகள் மீண்டும் கிடைத்த பிறகு, அவளை தன் தாய்வழி அத்தை மற்றும் தாத்தாவுடன் இருப்பதே சிறந்தது என்பதை கிருஷ்ணா உணர்கிறார். உறங்கிக் கொண்டிருக்கும் நிலாவை, ஆம்லா பாலிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். தன் மகள் நிலா மீது கிருஷ்ணாக்குள் அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் இந்த படம் எத்தனை முரை பார்த்தாலும் அதன் தாக்கம் உங்கள் மீது எப்போழுதும் இருக்கும்.


11 ஆண்டுகளை கடந்திருக்கிறது தெய்வ திருமகள். ஆனாலும், ‛நிலா வந்தாச்சு... கிருஷ்ணா வந்தாச்சு...’ என்கிற டயலாக்கை நேற்று கேட்டது போல உள்ளது.