திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 


1980 களில் இருந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தீவிர முன்னிலையில் இருந்த நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக தொழில்துறையிலும் முத்திரை பதித்தார்.


1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் திரைப்படத்தில் அறிமுகமானார். அவருடைய சில தகரம், ஆரோகணம், பன்னீர் புஷ்பங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் நாட்கள் போன்ற பிரபலமான மலையாளத் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.


கடைசியாக மம்மூட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்திலும், மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்தார். இவர் மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். 'கிரீன் ஆப்பிள்' என்ற விளம்பர நிறுவனத்தையும் வைத்திருந்தார்.


தமிழ் சினிமாவில் இயக்குநர் பிரதாப் போத்தனின் பங்கு :


தமிழில் ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் தான் இயக்கிய ’மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 














 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண