நாள்: 02.05.2023 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். பொறுமை நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் சுபகாரியம் நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மிதுனம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
கன்னி
உடனிருப்பவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளின் மூலம் மனதளவில் சோர்வு உண்டாகும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க முடியும். விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும். உத்தியோக பணி மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதாயகரமான நாள்.
துலாம்
ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் சார்ந்த செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.
தனுசு
மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். புத்திரர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மை ஏற்படும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பரிவு நிறைந்த நாள்.
மகரம்
பணிபுரியும் இடத்தில் சிறு சிறு மனவருத்தம் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.
மீனம்
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சாதுரியமான செயல்பாடுகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.