ஹன்சிகாவின் 50ஆவது படமாக விரைவில் வெளிவர உள்ள படம் ’மஹா’. வரும் ஜூலை 21ஆம் தேதி வெளிவரும் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே சிம்பு தோன்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீசை முன்னிட்டு நடிகர் சிம்புவுக்கு மதுரையில் ஆயிரம் அடி நீள பேனர் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையின் மீது 1000 அடி நீளத்துக்கு ஒட்டப்பட்டுள்ள இந்த பேனர் மதுரைவாசிகளையும் கவர்ந்துள்ளது.
மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில், சிம்பு ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Parthiban : "ஏ" இல்லாமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன் - மதுரை மீனாட்சி தரிசனத்திற்கு பின் நடிகர் பார்த்திபன் பேட்டி
Vijay Milton On Vijay : ”நடிப்பையே நிறுத்தப்போறேன்னு விஜய் சொன்னார்..” விஜய் மில்டன் சொன்ன புதுத்தகவல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்