பாலிவுட் சில அற்புதமான கதைகள் மற்றும் திரைப்படங்களுடன் வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திரைப்படத்தை இன்னும் யதார்த்தமாக்குவது நடிகர்களின் ஒப்பனை திறமைகள் மற்றும் மாற்றம்தான். சில நேரங்களில் அவை அடையாளம் காண முடியாதவையாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. படப்பிடிப்புக்கு முன் தினமும் ஒப்பனைக்காக சில மணிநேரங்கள் செலவிட வேண்டி இருக்கும், அப்படி அர்ப்பணித்து உருவான பாலிவுட்டின் சில முக்கியமான ஒப்பனை மாற்றங்கள் இங்கே:

அமிதாப் பச்சன் - பா

அமிதாப் பச்சன் ஆரோ மற்றும் பா வேடத்தில் நடித்தார். புரோஜீரியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை பாத்திரத்தில் நடித்திருந்தார் அமிதாப் பச்சன். ஒப்பனை குழுவில் கிறிஸ்டின் டின்ஸ்லி (தி பேஷன் ஆஃப் தி கிறிஸ்ட்) மற்றும் டொமினி டில் (தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்) போன்ற கலைஞர்கள் அடங்குவர். இந்த ஒப்பனை தோற்றத்தை கொண்டுவருவது மிகவும் கடினம், ஆனாலும் அதை செய்து காட்டிய இந்த திரைப்படம் ஒப்பனை திறன்களுக்காக தேசிய விருதைப் பெற்றது (2009).

ராஜ்குமார் ராவ் - ராப்தா

ராப்தாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றாலும், ராஜ்குமாரின் ஒப்பனை மிகவும் துல்லியமாக செய்யப்பட்டது. அவர் 34 வயது மனிதராக நடித்தார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஒரு ஒப்பனை குழு கடுமையாக வேலை செய்தது, அவர்கள் அவரை முற்றிலும் அடையாளம் காண முடியாதவர்களாக ஆக்கினர். அவரை நீண்ட நேரம் பார்த்தாலும், அது அவர்தான் என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி  அதில் பணியாற்றிய கலைஞர் ஜூபி ஜோஹல் மற்றும் குழுவினர் அருமையாக வேலை செய்தனர்.

கமல்ஹாசன் - இந்துஸ்தானி, இந்தியன் தமிழ் திரைப்படத்தின் ஹிந்தி வடிவமான இதிலும் அதே கதைதான். இந்த படத்தில் கமலுக்கு இரட்டை வேடம். எனவே வெளிப்படையாக ஒப்பனை எப்படியும் இருக்க வேண்டும். அவர் பாத்திரங்களுக்காக 70 வயது முதியவராக மாற வேண்டியிருந்தது. ஒப்பனை கலைஞர்கள் மைக்கேல் வெஸ்ட்மோர் மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஒப்பனை கலைஞர்களாக பணியாற்றினர். கமல் இப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றார்

ரிஷி கபூர் - கபூர் & சன்ஸ்

இந்த படத்தில் 90 வயது தாத்தாவாக ரிஷி கபூர் நடித்தார். முக்கிய நோக்கம், அவர் இயற்கையாக இருப்பதை விட வயதானவராக தோற்றமளிப்பதே, ஏனெனில் அந்த கதாபாத்திரம் இளம் வயதிலேயே முதிர்ச்சியடைந்த தோற்றம் கொண்டது. கிரெக் கேனோம் இதற்கு ஒப்பனை கலைஞராக சிறப்பாக பணியாற்றியிருந்தார். இந்த குடும்ப நாடகத்தில் ரிஷி கபூர் 90 வயதான தாத்தாவாக நடித்தார், மேலும் அவரது குறும்பு செயல்கள் அவரது அற்புதமான ஒப்பனையால் ரசிக்கப்பட்டன, முற்றிலும் இயற்கையாகத் தெரிந்தது.

ஷாருக்கான் - ஃபேன்

இந்த அதிரடி த்ரில்லரில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் சினிமா நடிகராகவும் அவருக்கான வெறித்தனமான ரசிகர் வேடகத்திலும் நடித்தார். SRK 'வெறித்தனமான' கதாபாத்திரங்களில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவரது தோற்ற மாற்றத்திற்கு கிரெக் கேனமுக்கே முழு க்ரெடிட்ஸ் (கபூர் & சன்ஸில் ரிஷி கபூரின் தோற்றத்தில் பணியாற்றிய கலைஞர்)

ஹிருத்திக் ரோஷன் - தூம் 2

அவர் நடித்திருந்த கதாப்பாத்திரம் ஒரு சர்வதேச திருடன். இதற்காக ஒப்பனை வேலைகள் நிறைய செய்ய வேண்டியிருந்தது. அவர் ஒரு திருடன், ஒரு பழைய பாதுகாவலர், ஒரு வயதான பெண்மணி மற்றும் ஒரு குள்ளனாக மாறி அசத்தினார். ஸ்ஜான் கில்லிங்ஸ் இந்த ஒப்பனையின் மந்திரத்தைக் காட்டி, ஒவ்வொன்றையும் முழுமையுடன் செய்து காட்டினார்.

கமல்ஹாசன் - சாச்சி 420

இந்தப் படம் ஹாலிவுட்டின் 'மிஸ்ஸஸ் டவுட்ஃபயர்' படத்தின் தழுவல். வயதான பெண் தோற்றத்தில் கமலஹாசனை காட்சிப்படுத்த, நம்பத்தகுந்த தோற்றத்தை உருவாக்க நிறைய புதிய தொழில்நுட்பங்கள், ஒப்பனை திறன்கள் தேவைப்பட்டது. ஆஸ்கர் வென்ற மைக்கேல் வெஸ்ட்மோர் இப்படத்தின் ஒப்பனையை கவனித்திருந்தார்.

ஷபானா ஆஸ்மி - மக்தீ

இந்த படம் பாலிவுட்டின் முதல் நகைச்சுவை திகில் திரைப்படம். இதற்கு நடிப்புத்திறன் மட்டுமின்றி நிபுணத்துவம் பெற்ற ஒப்பனை கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். ஷபனா தன்னை ஒரு தீய சூனியக்காரியாக மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது, அது அருண் அதெத்யா சீலின் மந்திரக் கைகளால் துல்லியமாக சாத்தியமானது.

ஜான் ஆபிரகாம் - ரோமியோ அக்பர் வால்டர்

திரைப்படங்களில் ஜானைப் பார்த்து நாம் பழகியிருந்தாலும், அதிலெல்லாம் நிறைய ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் இருக்கும், சில துப்பாக்கிகள் கார்களை புரட்டிப்போடும், மொத்த படத்தையும் சுமந்து செல்வார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் வகித்த பாத்திரம் அவருடைய வழக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்தது. அவர் ஒரு வயதான மனிதராக நடித்தார், ஒப்பனை ப்ரீதிஷீல் சிங் செய்தார்.

ஆர். மாதவன் - ராக்கெட்ரி - நம்பி விளைவு (இன்னும் வெளியிடப்படவில்லை)

இன்னும் வெளியாகாத இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாதவன் வெளியிட்டிருந்தார். நாம் காணக்கிடைத்த படங்கள் அதற்குத் தேவையான ஒப்பனைத் திறன்களின் எண்ணிக்கையை ஏற்கெனவே நமக்கு உணர்த்தின. மாதவன் 77 வயதான விஞ்ஞானியாக மாற்றப்படுகிறார்.