தமிழ் சினிமா கண்ட துணிச்சலான நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். 1978ம் ஆண்டு பாசத்திற்குரிய இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் திரைப் பயணத்தை தொடங்கிய ராதிகா இன்று வரை வெகு சிறப்பாக பயணித்து கொண்டிருக்கிறார். பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராதிகாவின் சிறந்த 10 படங்கள் : 


பாஞ்சாலி : கிழக்கே போகும் ரயில் :


அறிமுகமான முதல் படமே தனது வெகுளித்தனமான, வெள்ளந்தியான நடிப்பால் 'பூவரசம்பூ பூத்தாச்சு' என பார்வையாளர்களையும் தன்னுடன் ரயிலில் பயணம் செய்ய வைத்த ராதிகாவை யாரவது அவ்வளவு எளிதில்  மறக்க முடியுமா? சலங்கையை அப்படியே கொட்டி விட்டது போன்ற அவரின் சிரிப்பை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்டார் பாரதிராஜா. இன்றும் அந்த கலப்படமில்லாத சிறப்பை தக்கவைத்துள்ளார்.


 



விருமாயி - கிழக்குச் சீமையிலே :


தமிழ் சினிமாவில் மற்றுமொரு பாசமலர் படமாக பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கிழக்குச் சீமையிலே" படத்தில் உணர்ச்சியின் குவியலாக பாசமிகு தங்கையாக அண்ணனுக்காக எதையும் செய்யும் விருமாயி கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு உச்சக்கட்டம்.  


சுந்தராம்பாள் - ஜீன்ஸ் :


இயக்குனர் ஷங்கரின் 'ஜீன்ஸ்' படத்தில் சுந்தராம்பாள் என்ற வலுவான கதாபாத்திரத்தில் மனசாட்சியே இல்லாத ஒரு அரக்க குணம் படைத்த கதாபாத்திரமாக அப்படியே வன்மத்தை வெளிக்காட்டினார். ரசிகர்களிடம் இருந்து திட்டை வாங்கிய ராதிகாவுக்கு அப்படம் ஒரு மிக  சிறந்த படமாக அமைந்தது. 


 




இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி - நானும் ரவுடி தான் :


மகனின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட ஒரு எதார்த்தமான அம்மாவாக ராதிகாவின் நடிப்பில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மக்களை காண முடிந்தது. 


உமா - நல்லவனுக்கு நல்லவன் : 


நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக மிகவும் சாதாரண ஒரு கதாபாத்திரமாக என்ட்ரி கொடுத்த ராதிகா பின்னர் கணவரை முழுமையாக ஆளுமை செய்து அவரிடம் இருந்த கெட்ட விஷயங்களை முற்றுலுமாக அகற்றி மாயாஜாலம் செய்யும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார் ராதிகா.


ஆசிரியை சாரதா - கேளடி கண்மணி : 


நடிப்பில் தான் ஒரு ராட்சசி என்பதை நிரூபித்த படம். அம்மா ஸ்ரீவித்யா அப்பா பூரணம் விஸ்வநாதன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட காட்சியில் அனைவரையும் கதறடித்து விட்டார். அவரை தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரை அத்தனை உயிரோட்டத்துடன் நடித்திருக்க முடியாது. இப்படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார். 



வழக்கறிஞர் உமா - பாசப் பறவைகள் :


கணவனின் கொலைக்கு அண்ணன் தான் காரணம் என அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் கலைஞரின் வசனங்களை தெறிக்க விட்ட ராதிகாவின் நடிப்பு வேற லெவல். 



ப்ரீத்தா - மெட்டி :


இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் 'மெட்டி' படத்தில் அம்மாவின் இறப்புக்கு உடைந்து கதறி அழும் மகளான ராதிகாவின் நடிப்பை பார்த்த ஒட்டுமொத்த செட்டுமே அழுததம். அது தான் ராதிகாவின் நடிப்புக்குள் இருக்கும் ரியாலிட்டி. 



இளங்கோவின் அம்மா - ரோஜாக்கூட்டம் :


ஸ்ரீகாந்த் அம்மாவாக ஒரு அமைதியான உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு பெற்றோராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 


ராக்காயி - போக்கிரி ராஜா :


எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியான 'போக்கிரி ராஜா' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக ராக்காயி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்