விவிபேட் இயந்திரம் தொடர்பான வழக்கில் அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அப்போது பேசிய நீதிபதிகள், ’’நாடு தழுவிய முறையில் மேற்கொள்ளப்படும் வாக்குப்பதிவு அமைப்பை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். அறிவியல் பூர்வமான விசாரணை செய்யலாமே தவிர, கண்மூடித்தனமான சந்தேகங்கள் கூடாது’’ என்று தெரிவித்தனர்.


இரண்டு கோரிக்கைகளும் நிராகரிப்பு


ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, வாக்காளர் கையில் கொடுக்க வலியுறுத்திய கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.


பின்னணி என்ன?


இந்திய நாட்டில் ம்க்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் அப்போதில் இருந்தே அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இதனால், விவிபேட் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டது. 


யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ள விவிபேட் பயன்படுத்தப்பட்டது. எனினும் 7 நொடிகள் மட்டுமே அது திரையில் தோன்றும். வாக்களிக்கும்போது, ​​சீரியல் நம்பர், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய சீட்டு அச்சிடப்பட்டு வாக்காளருக்கு வழங்கப்படும்.


விவிபேட் மூலம் சரிபார்ப்பு


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் மூலம் சரிபார்ப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.